காஷ்மீரில் நீடிக்கிறது வன்முறை: பதற்றம் நீடிப்பதால் ராணுவம் குவிப்பு
2016-04-17@ 09:09:51

ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் வன்முறையை ஏற்றுகொள்ளமுடியாது என்று அம்மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்துள்ளார். குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாராவில் பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து இளைஞர்கள் பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல்வீச்சீல் ஈடுபட்டுள்ளனர். கூட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதனை கண்டித்து காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.
துப்பாக்கிச் சூடு மற்றும் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை அம்மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி சந்தித்து பேசினார். வன்முறையை ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது என்று அப்போது அவர் கூறினார். மேலும் உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கில் மாகம், லங்காடே, ஹண்ட்வாரா, குப்வாரா உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கலவரம் காரணமாக ஸ்ரீ நகரில் கூடுதல் துணை ராணுவ படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
திருப்பதி 2-வது மலைப்பாதையில் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு; பக்தர்கள் அவதி
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
வணிகம் புரிதலை எளிதாக்குதல் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு சிறந்த சாதனையாளர் பிரிவிற்கு முன்னேற்றம்.: ஒன்றிய அரசு
5 நிர்பயா குற்றவாளிகள் உள்பட 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்தார் ஜனாதிபதி
வீட்டில் குண்டு வெடித்து தந்தை, மகன் சாவு
கேரளாவில் இன்று 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..