குமரி மீன்பிடி துறைமுகம் படகு கட்டும் தளத்தில் பயங்கர தீ விபத்து: 7 படகுகள் எரிந்து நாசம்
2016-04-15@ 20:13:27

கன்னியாகுமரி: கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 படகுகள் எரிந்து நாசமாயின.
கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் விசைப்படகுகள் கட்டும் தளம் உள்ளது. இங்கு தற்போது 50க்கும் மேற்பட்ட புதிய விசைப்படகுகள் கட்டப்பட்டு வருகின்றன. இன்று காலை 6 தொழிலாளர்கள் படகு கட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென படகு கட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த மரங்களில் தீ பிடித்து எரிந்தது. இது குறித்து அவர்கள் ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
தீயணைப்பு நிலைய அலுவலர் சத்தியகுமார் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ கட்டுப்படாமல் தொடர்ந்து எரிந்ததால் நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.படகு கட்டும் தளத்தில் உள்ள மரங்களில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் 3 வாகனங்களில் தண்ணீர் கொண்டு வந்து வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். படகு கட்டும் பகுதியில் மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் ரூ.80 லட்சம் மதிப்பிலான 7 படகுகள் தீயில் எரிந்ததாக தெரிகிறது
மேலும் செய்திகள்
நள்ளிரவில் மலர்ந்து அதிகாலையில் வாடும் நிஷாகந்தி: கூடலூரில் பூத்து குலுங்குகிறது
மழையால் களை இழந்த வாசன திரவிய கண்காட்சியை மழை காலத்திற்கு முன்னமே நடத்த கோரிக்கை
திருத்துறைப்பூண்டி நகராட்சி குப்பை கிடங்கில் தீ
நீடாமங்கலம் அருகே கோரையாற்றில் பாலம் கட்டும் பணி துவங்கி 3 ஆண்டாகியும் நிறைவடையவில்லை: விரைந்து முடிக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு
வத்தல்மலை கொண்டை ஊசி வளைவில் இரும்பு தடுப்பு வேலி: விரைவில் பஸ் போக்குவரத்து துவக்கம்
திருவாரூர் அருகே கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இரு குழந்தைகளுடன், தாய் தற்கொலை முயற்சி
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!