நாய் குட்டியை பிரித்ததால் பாசக்கார குரங்கு ஆவேசமாக சுற்றுகிறது
2016-01-05@ 12:24:39

ஈரோடு: ஈரோட்டில் கடந்த 3 நாட்களாக நாய்குட்டியுடன் சுற்றி வந்த குரங்கிடமிருந்து நாய் குட்டியை பிரித்ததால் குரங்கு ஆவேசத்துடன் சுற்றி வருகிறது. இந்த குரங்கை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தும் அதில் சிக்காததால் வனத்துறையினர் கவலையில் உள்ளனர். ஈரோடு முத்துவேலப்பா வீதி, எஸ்.கே.சி.வீதி ஆகிய வீதிகளில் கடந்த 3 நாட்களாக ஒரு குரங்கு நாய் குட்டியை அரவணைத்தபடி சுற்றி வந்தது. இதை பார்த்த பொதுமக்கள் குரங்கிற்கும், நாய்குட்டிக்கும் பழங்கள், பிஸ்கட்டுகளை வழங்கினார்கள். அதை சாப்பிட்டு விட்டு நாய் குட்டியை விடாமல் தூக்கியபடி அங்கும், இங்கும் சென்று வந்தது.
கடந்த 2 நாட்களாக முத்துவேலப்பா வீதியில் உள்ள ஆறுமுகம் நஞ்சம்மாள் காம்பவுண்ட் பகுதியில் உள்ள மரங்கள், மின்கம்பங்களில் நாய்குட்டியுடன் குரங்கு தஞ்சமடைந்திருந்தது. நாய்குட்டி மின்கம்பத்தின் மேல் பகுதியில் குரங்குடன் இருந்தபோது தவறி விழுந்து காயமடைந்தது. இதனால் நாய் குட்டியை குரங்கிடமிருந்து மீட்க பொதுமக்கள் போராடியபோது நாய்குட்டியை விடாமல் குரங்கு தூக்கி சென்றது. இதுகுறித்து இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் குரங்கை பிடிக்க கூண்டு அமைத்துள்ளனர். ஆனால் கூண்டிற்குள் சிக்காமல் குரங்கு நாய்குட்டியுடன் தப்பியோடியது. குரங்கிற்கு உணவு வழங்கி அதை பிடிக்க முயன்றபோது உணவை சாப்பிட்டு விட்டு மீண்டும் மரத்தில் தஞ்சமடைந்தது.
இந்நிலையில் நேற்று குரங்கை பிடிப்பதற்காக சுருக்கு கம்பியை வீசியுள்ளனர். அந்த கம்பி குரங்கு மீது பட்டதால் நாய்குட்டியை விட்டு விட்டு கம்பியில் இருந்து தப்பித்து ஓடியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு வனத்துறையினர் குரங்கிடமிருந்து நாய் குட்டியை மீட்டனர். தன்னிடம் இருந்து நாய்க்குட்டியை பிரித்ததால் குரங்கு ஆவேசத்துடன் சுற்றி வருகிறது. நாய்க்குட்டியை சுமந்து சென்றபோது அமைதியாக இருந்த குரங்கு தற்போது ஆவேசமடைந்து பொதுமக்களை மிரட்டி வருகிறது. இதனால் குரங்கை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக வனத்துறையிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் குரங்கு தப்பி சென்று வருவதால் வனத்துறையினர் கவலையில் உள்ளனர். குரங்கிடமிருந்து நாய் குட்டியை பிரித்ததால் குரங்கு பொதுமக்களை தாக்க வாய்ப்புள்ளது. உடனடியாக குரங்கை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
காரமடையில் அதிகாலையில் துணிகரம் பூ வியாபாரியின் மொபட்டை திருடிய சிறுவன்: சிசிடிவி காட்சி மூலம் போலீசார் தேடுதல் வேட்டை
வேகத்தடைகளில் வர்ணம் தீட்டும் பணி
ஜெயங்கொண்டம் அருகே இலையூர் செல்லியம்மன் கோவில் தேர் திருவிழா
மின்சாரம் பாய்ந்து கூலி தொழிலாளி சாவு
ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமி கைவரிசை பிரபல பொருட்கள் டெலிவரி மையத்தில் ரூ.2.35 லட்சம் திருட்டு: முசிறியில் நள்ளிரவில் பரபரப்பு
விடுதலையானார் பேரறிவாளன்.. ஆனந்த கண்ணீரில் குடும்பம்... பேரறிவாளனுக்கு இனிப்புகள் ஊட்டி தாய், தந்தை, உறவினர்கள் நெகிழ்ச்சி!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!