4 டிகிரி செல்சியஸ் குளிர் ஊட்டியில் உறைபனி மக்கள் கடும் அவதி
2016-01-04@ 01:09:17

ஊட்டி: நீலகிரியில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் இருந்து டிசம்பா் முதல் வாரம் வரை வடகிழக்கு பருவமழை பெய்தது. இதனால் நவம்பா் மாதத்தில் துவங்க வேண்டிய பனி பொழிவு தாமதமாக கடந்த மாதம்தான் துவங்கியது. துவக்கத்தில் இருந்தே கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக பனியின் தாக்கம் அதிகாித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. கடும் உறைப்பனி பொழிவால் அதிகாலை நேரங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறி செடிகளும் கருகி வருகின்றன. நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 21 டிகிரி செல்சியசும், குறைந்தப்பட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. கடும் குளிா் காரணமாக தொழிலாளர்கள் ஊட்டி நகாின் பல இடங்களிலும் தீ மூட்டி குளிர் காய்ந்து வருவதையும் காண முடிந்தது. இதேபோல் நெல்லையில் நிலவிவரும் கடுங்குளிருக்கு 2 முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் செய்திகள்
தாயைப் பிரிந்த 2 யானை குட்டிகளை வளர்த்த ஊட்டி பழங்குடியின தம்பதியின் ஆவணப்படம்: ஆஸ்கர் விருதுக்கான இறுதிப் பட்டியலுக்கு தேர்வு
கோயில் காணிக்கை எண்ணும் பணி யூடியூப்பில் நேரடி ஒளிபரப்பு
முதல் முறையாக `பழங்குடி பொக்கிஷங்கள்’ நடமாடும் வாகனத்தில் விற்பனை
‘அதிமுக, பாஜ தேர்தல் வியூகங்களை முறியடிக்கணும்’
பாஜ வளரவில்லை அதிமுகவின் நிலைமைக்கு டெல்லிதான் காரணம்: போட்டு உடைத்த டிடிவி
கோயில்களில் ஓபிஎஸ் சிறப்பு பூஜை
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!