தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஜனவரி 11ல் அரையாண்டு தேர்வு: ரத்து செய்யும் கோரிக்கையை நிராகரித்தது தமிழக அரசு
2015-12-19@ 00:13:46

சென்னை: தொடர் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வுகள், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வரும் ஜனவரி 11ம் தேதி முதல் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் மழைக்கு பெரும் பாதிப்புக்குள்ளாகின. அதனால் கடந்த மாதம் 7ம் தேதி முதல் இந்த மாதம் 12ம் தேதி வரை தொடர்ச்சியாக மழை பெய்து வந்ததால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இடையில் 3 நாட்கள் மட்டும் பள்ளிகள் திறந்தன. இதனால், மொத்தம் 34 நாட்கள் விடுமுறை விடப்பட்டன.
தொடர் மழைக்கு பல லட்சம் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு பொருட்கள், உடைமைகள், பாடப்புத்தகங்களை இழந்தனர். இதனால் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்ததால் அவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இப்போது மழை விட்டு, பள்ளிகள் திறந்தாலும், மாணவர்கள் பலருக்கு பாடபுத்தகங்கள் வழங்கப்படவில்லை. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அந்த துயரத்தில் இருந்து இன்னும் மீளவில்லை. இதனால் அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். வழக்கமாக அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 2வது வாரத்தில் தொடங்கி, 24ம் தேதிக்குள் முடிவையும். அதன்பின் கிறிஸ்துமஸ் பண்டிகையான 25ம் தேதியையொட்டி தொடர்ந்து அரையாண்டு விடுமுறை விடப்படும். இந்த ஆண்டு விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையால், அந்த தேர்வையே ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல் மூர்த்தி, ‘டிசம்பர் மாதம் நடந்த இருந்த அரையாண்டு தேர்வை ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளோம். அதற்கு முன்பு அரையாண்டு தேர்வு நடத்தக் கூடாது என்று பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளோம். உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்போம். மாணவர்கள் அச்சப்படதேவையில்லை. புத்தகம் இல்லாத மாணவர்களுக்கு அரசு புத்தகங்களை வழங்கி வருகிறது. ஜனவரி மாதம் அரையாண்டு தேர்வை நடத்துவதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அரையாண்டு தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, தமிழக அரசு தேர்வு அட்டவணையை நேற்று மாலை வெளியிட்டது.
அதன் விவரம் வருமாறு: பத்தாம் வகுப்பு, பிளஸ்2 தேர்வுகள் வழக்கம் போல காலை 10 மணிக்கு தொடங்கும். மதியம் 12.45க்கு தேர்வு முடியும். கேள்வித்தாள் படித்துப் பார்க்கவும், விடைத்தாள் முகப்பு தாளில் விவரங்கள் குறிக்கவும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது. இதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் ஜனவரி 11ம் தேதி அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. அதில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் 2வது செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படுகிறது.இதன் மூலம் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளது. மேலும், முழு ஆண்டுத் தேர்வு வழக்கம்போல, மார்ச் மாதம் தொடங்கி நடத்தப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் செய்திகள்
மணிவிழா காணும் அன்புச் சகோதரர் எழுச்சித் தமிழர் திருமாவளவனை நெஞ்சார வாழ்த்துகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்து..!!
அதிமுக ஆட்சியில், விருது பெறுவதற்காக 22,000 சாலை விபத்து மரணங்கள் குறைத்து காட்டப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியீடு..!
தமிழ்நாட்டு மக்களுக்கு சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும்.: அனைத்து அலுவலர்களுக்கும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு
சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல்: 40 லட்சம் வாடகை பாக்கி
கலைஞரின் மனச்சாட்சியாக அறியப்படும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 89வது பிறந்தநாள்: திருவுருவ சிலைக்கு திமுக அமைச்சர்கள் மரியாதை..!!
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு மேசை, விலையில்லா சைக்கிள்கள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!