கர்நாடக ரசாயன கழிவுகளால் செத்து மிதக்கும் பறவைகள் : மேட்டூரில் பச்சை நிறமாக மாறியது தண்ணீர்
2015-11-28@ 00:49:36

மேட்டூர்: கர்நாடகாவில் இருந்து காவிரியில் வரும் ரசாயனம் கலந்த கழிவு நீரால் மேட்டூர் நீர்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்களை சாப்பிடும் பறவைகளும் இறப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை நீர்தேக்கத்தில் கிடைக்கும் மீன்களை உண்பதற்கு ஆண்டுதோறும் நாரைகள், நீர்க்காகங்கள் மற்றும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து முகாமிடுவது வழக்கம். இப்பகுதியில் அதிகளவில் மீன்கள் சிக்குவதால், இங்கேயே தங்கி இனப்பெருக்கமும் செய்யும். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து ரசாயன கழிவுகள் காவிரியாற்றில் கலக்கப்படுகிறது. இந்த கழிவுகள் அனைத்தும், மேட்டூர் நீர்தேக்கத்தின் இடதுகரையில் ஒதுங்கி தேங்கி நிற்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
குறிப்பாக கீரைக்காரனூர், பண்ணவாடி, சேத்துக்குளி, ஒட்டனூர், கோட்டையூர், கூனாண்டியூர், நாகமரை போன்ற பகுதிகளில் ரசாயன கழிவுகள் தேங்கி நிற்கிறது. இதனால், மாசடைந்த தண்ணீரில் போதிய ஆக்சிஜன் இல்லாதது போன்ற காரணங்களால் மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கின்றன. இவ்வாறு மிதக்கும் மீன்களை இரையாக கொள்ளும் நாரை, கழுகு உள்ளிட்ட பறவைகள் மட்டுமின்றி தண்ணீரில் வாழும் சில வகை பாம்புகளும் செத்து மடிவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமின்றி காவிரிக்கரையில் கால்நடை மேய்ப்பவர்களுக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள், மேட்டூர் அணையின் உட்பகுதி மட்டுமின்றி கரையோரமும் தேங்கி நிற்கின்றன. இதனால், தண்ணீர் பச்சை நிறமாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் தண்ணீர் மிகவும் மாசடைந்து அதில் வாழும் மீன்கள் கொத்துக் கொத்தாக செத்து மிதக்கின்றன. உச்ச கட்ட அதிர்ச்சியாக இந்த மீன்களை இரையாக கொள்ளும் பறவைகளும் திடீர் திடீரென செத்து விழுகின்றன. இந்த கழிவுகளால் காவிரி கரையோரத்தில் வசிப்பவர்களின் கால்நடைகளுக்கும், கோழிகள் போன்ற பறவைகளுக்கும் நோய் பரவி, இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
மனிதநேய வார நிறைவு விழா ஊட்டியில் 9 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி-ரூ.5.62 லட்சத்தில் வழங்கப்பட்டது
ஊட்டி - குன்னூர் சாலையில் வேலிவியூ பகுதியில் கம்பி வலை தடுப்புசுவர் கட்டும் பணிகள் தீவிரம்
வலங்கைமான் பகுதியில் நெல்லுக்கு பிறகு பயறு சாகுபடி செய்ய வேளாண் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி
வளர்ச்சிப் பணிக்கு நிதி ஒதுக்குவதில்லை என கூறி ஜெகதளா பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் திடீர் தர்ணா
கவுன்சிலர் ஆதங்கம் ஊட்டி நகரில் இருந்த கால்வாய் மாயம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தர வேண்டும்-நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
செய்யாறு அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கலை நிகழ்ச்சிகளுடன் பொன்விழா ஆண்டு கொண்டாட்டம்-நன்கொடையாளர்களை கவுரவித்த எம்எல்ஏ
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!