SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பா.ஜ.க, வி,எச்.பி. தொண்டர்கள் மீது போலீஸ் தடியடி : கலவரத்தில் வி,எச்.பி. பிரமுகர் உயிரிழந்ததால் பதற்றம்

2015-11-10@ 16:00:21

கர்நாடக : கர்நாடக மாநிலம் குடுகு மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரன் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழாவில் நேரிட்ட கலவரத்தின் போது மாவட்ட விஷுவ இந்து பரிஷத் தலைவர் புட்டப்பா உயிரிழந்ததாள் பதற்றம் அதிகரித்துள்ளது. திப்பு சுல்தான் பிறந்த தினம் கர்நாடகாவில் அரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்க்கு அம்மாநில பா.ஜ.க., விஷுவ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்துவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் குடுகு மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியர் தலைமையில் திப்பு சுல்தான் பிறந்த தின விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்தவர்களை பா.ஜ.க, வி,எச்.பி. தொண்டர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டு கலவரம் வெடித்ததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

நிலைமை கட்டுக்குள் அடங்காததால் குடகு மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏராளமான இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனிடையே விஷுவ இந்து பரிஷத்தின் குடகு மாவட்டட தலைவர்  புட்டப்பா தடியடியில் உயிரிழந்ததாக செய்திகள் பரவின. ஆனால் தடியடியிளிருந்து தப்பிக்க உயரமான சுவரை தாண்டி குதித்த போது தவறி விழுந்து அவர் உயிரிழந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

how do abortion pill work pristineschool.com misoprostol abortion
amoxicillin abraham.thesharpsystem.com amoxicillin dermani haqqinda

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • spain-trees-24

    ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

  • gandhi-13

    ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

  • taipei-fashion-week-taiwan

    தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

  • kalifffo1

    தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

  • pak-123

    பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்