போதை பொருள் கடத்திய சவுதி இளவரசர் லெபனானில் கைது
2015-10-27@ 13:21:13

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையத்தில நேற்று சவுதி அரேபியா தலைநகர் ரியாத் செல்லும் தனியார் விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. அதில் 40 சூட்கேஸ்கள் ஏற்றப்பட்டன. இவற்றில் போதைப் பொருட்கள் மற்றும் மாத்திரைகள் அடைத்து கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அவற்றை சோதனை செய்தனர். அவற்றில் கோகைகன் போதை பொருளும், ‘கேப்டகான்’ என்ற தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளும் இருந்தன. அவற்றை லெபனானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு கடத்தி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை தொடர்ந்து அந்த விமானத்தை சுற்றி வளைத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் போதை மருந்து, மாத்திரைகளை 5 பேர் கடந்த முயன்றது தெரிய வந்தது. அவர்களில் மிக முக்கியமான நபர் சவுதி அரேபியா இளவரசர் அப்தெல்மொசின் பின் வாலித் பின் அப்துல்லாசிஸ் ஆவார். எனவே அவர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு
பாக். ஆல்-ரவுண்டரின் திருமண போட்டோஷூட்: சமூக வலைதளத்தில் வைரல்
இலங்கை நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக அஜித் ராஜபக்சே தேர்வு: திரிகோணமலையிலிருந்து மாஜி பிரதமர், மகன் எஸ்கேப்?
இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் - பாலஸ்தீனர்கள் இடையே மோதல்: 100-க்கும் மேற்பட்டோர் காயம்
வடகொரியாவில் பிடியை இறுக்கும் கொரோனா கிருமி...மருந்து வினியோகத்தில் ஈடுபட ராணுவத்திற்கு கிம் உத்தரவு
கார்கிவிலிருந்து ரஷ்ய படை விரட்டியடிப்பு; போரில் உக்ரைன் கை ஓங்குகிறது: டான்பாஸையும் மீட்க தீவிர சண்டை
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!