மகளிர் காங்கிரஸ் வரவேற்பை புறக்கணித்த நக்மா : கோஷ்டி பூசலால் கட்சியில் புகைச்சல்
2015-10-16@ 20:12:37

சென்னை: மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் வரவேற்பை நடிகை நக்மா புறக்கணித்த சம்பவம் தமிழக காங்கிரசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் சமீபகாலமாக திரைப்பட நடிகைகள் இணைந்து வருகின்றனர். அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உயர்ந்த பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலிடத்தின் இந்த நடவடிக்கை கட்சிக்காக காலம் காலமாக உழைத்து வரும் நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை நக்மாவுக்கு கடந்த வாரம் அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. மேலும் அகில இந்திய பதவிகளில் இருப்பவர்களுக்கு குறிப்பிட்ட ஏதாவது ஒரு மாநிலத்துக்கு பொறுப்பாளராக நியமிக்கப்படுவார்கள்.
அந்த வகையில் நடிகை நக்மா தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்துக்கு மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று அவர் சென்னைக்கு வருகை தருவதாக மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தகவல் கிடைத்தது. தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி விஜயதாரணி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதால், அவர் சார்பாக மகளிர் குழு ஒன்றை அனுப்பி வைத்தார். நேற்று இரவு 7.45மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்திறங்கிய நடிகை நக்மாவை மகளிர் காங்கிரசார் வரவேற்க சென்றனர். ஆனால் அவர்களை நடிகை நக்மா கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் மகிளா காங்கிரஸ் தலைவி விஜயதாரணியை தொடர்பு கொண்டு விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறியுள்ளனர்.
தேசிய அளவிலான பதவியில் இருந்து கொண்டு கட்சியினரை எப்படி மதிக்காமல் செல்லலாம் என விஜயதாரணி, நடிகை நக்மாவை தொடர்பு கொண்டு பேசியதாக கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த சம்பவத்தால் இன்று சத்தியமூர்த்திபவனில் நடிகை நக்மாவின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் நடிகை நக்மாவின் நடவடிக்கை குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மற்றும் மேலிட நிர்வாகிகளிடம் புகார் அளிக்கவும் மகளிர் காங்கிரசார் திட்டமிட்டுள்ளனர். நடிகை நக்மாவின் இந்த செயல்பாடுக்கு தமிழக மகளிர் காங்கிரசில் எழுந்துள்ள கோஷ்டி பூசலும் ஒரு முக்கிய காரணம் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகள்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார கூட்டத்திற்காக அதிமுக நிர்வாகிகள் போல் செயல்பட்ட அரசு அதிகாரிகள்: தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ குற்றச்சாட்டு
கடன் வாங்கி கமிஷன் அடிக்கும் ஒரே கேடுகெட்ட ஆட்சி, தமிழகத்தில் தற்போது உள்ள முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி தான்: மு.க.ஸ்டாலின் அறிக்கை
ஜெயலலிதா இருந்தபோது எல்லோரும் சசிகலாவுடன் உறவோடு இருந்தோம்: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
சொல்லிட்டாங்க...
கவுன்சில் கூட்டத்தில் எந்த தீர்மானமும் எடுக்க படாத நிலையில் இ.ஆக்சன் விட தீர்மானம் நிறைவேற்றியதாக கலெக்டருக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்: கே.சி.முரளி குற்றச்சாட்டு
மேலவை தலைவர் பதவி வழங்க வேண்டும்: மஜத எம்எல்சி பசவராஜ்ஹொரட்டி அதிரடி பேட்டி
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்