SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்யும் ஆசிரியர்கள் டிஸ்மிஸ்

2012-06-27@ 14:25:43

சிவகங்கை: பள்ளி மாணவிகளிடம் தவறான முறையில் நடக்கும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர்களின் கல்வி சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

பள்ளிகளில் மாணவிகளுக்கு சில ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு அளிப்பதாக தொடர்ந்து பல்வேறு இடங்களில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பான புகார்களின் பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்படுகின்றனர். அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கும் ஆசிரியர்களை உடனடியாக டிஸ்மிஸ் செய்யவும், அவர்களின் கல்விச் சான்றுகள் அனைத்தையும் ரத்து செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் சபீதா வெளியிட்டுள்ள அரசாணை:
மாணவர்களுக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய ஆசிரியர்களில் சிலர் ஒழுக்க கேடான முறையில் நடந்து கொள்கின்றனர். இதனால் மாணவர் சமுதாயம், குறிப்பாக பெண் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே பள்ளி மாணவ, மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறான முறையில் நடந்து கொள்வதை முழுவதும் தவிர்ப்பதற்காக கீழ்கண்ட பரிந்துரையை கடைபிடிக்க வேண்டும்.

அதாவது தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவர்களுக்கு கட்டாய ஓய்வு, டிஸ்மிஸ் போன்ற தண்டனை வழங்கப்படும். சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும். மாணவ, மாணவிகள் மற்றவர்களின் தவறான நடவடிக்கைகளில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும். அதற்காக அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தவறான செயல்களில் ஈடுபடுவதை தடுக்க, அவர்களுக்கு ஆலோசகர்கள் மூலம் உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும்.

மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் பிரச்னைகளை களைய, பள்ளி கல்வித்துறை மூலம் உளவியல் ஆலோசகர், உதவியாளர் மற்றும் அனைத்து வகை வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆலோசனை மையங்களை ஏற்படுத்த வேண்டும். அதன்மூலம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வும் ஆசிரியர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pune1

    புனேவில் பயங்கர வெடிச் சத்தத்துடன் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரை..!!

  • hathraas1

    நாட்டையே உலுக்கிய ஹாத்ராஸ் இளம்பெண் கொடூர கொலை!: குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்க வெடிக்கும் போராட்டங்கள்...உரிய நீதி கிடைக்குமா?

  • chinamartyrs1

    நாட்டுக்காக உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையில் சீன தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் அனுசரிப்பு!: அதிபர் ஜி ஜின்பிங், தலைவர்கள் பங்கேற்பு..!!

  • arch1

    அர்மீனியா - அசர்பைஜான் இடையேயான மோதல் முழுமையான போராக மாறியது: சண்டையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100ஐ கடந்தது..!!

  • 01-10-2020

    01-10-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்