சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 5 ஆண்டு சிறை; மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
2015-10-07@ 01:06:54

சென்னை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு சென்னை மகளிர் நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் குமரகுரு. இவரது 4 வயது மகள் சுபத்ரா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). அதே பகுதியில் உள்ள ஒரு மெத்தைக் கடையில் வேலை பார்ப்பவர் நஷீர் (31). கடந்த 2014 ஏப்ரல் 24ம் தேதி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சுபத்ராவை நஷீர் தனது கடைக்குள் கூட்டிச்சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இந்த விஷயத்தை சிறுமி தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளார்.
இதையடுத்து, குமரகுரு கொடுத்த புகாரின்படி, நஷீரை கைது செய்த போலீசார் அவர் மீது குழந்தைகள் பாலியல் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி மீனா சதீஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் நஷீருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
இன்ஸ்டாகிராமில் காதலித்து மணந்த 7 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை: மலையில் இருந்து தள்ளிவிட்ட எஸ்ஐ மகன் அதிரடி கைது
பாடியநல்லூர் சோதனை சாவடி, காஞ்சியில் ஆந்திரா, கர்நாடகாவுக்கு கடத்திய 17.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: மூன்று பேர் கைது; உரிமையாளருக்கு போலீஸ் வலை
சென்னை அண்ணாசாலையில் சுவர் இடிந்து பெண் பலி மேலும் ஒருவர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே அதிமுக பெண் கவுன்சிலரை கடத்திய வழக்கில் 4 பேர் கைது
பார்ட்டிக்கு அழைத்து சென்று மதுவை ஊற்றிக் கொடுத்து 13 வயது சிறுமி பலாத்காரம்: நண்பர்கள் இருவர் கைது
விமான நிலையத்தில் ரூ.95 லட்சம் தங்கம் பறிமுதல்
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!