ஈரான் படத்துக்கு இசையமைத்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘பத்வா’: மும்பையை சேர்ந்த சன்னி அமைப்பு அறிவிப்பு
2015-09-13@ 03:22:14

மும்பை: முகமத் என்ற பெயரில் முகமது நபிகளின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்த ஈரானிய இயக்குநர் மஜித் மஜிதி மற்றும் அந்தப் படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக பத்வா எனப்படும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மும்பையைச் சேர்ந்த சன்னிப் பிரிவு அமைப்பான ரஸா அகாடமி இந்த பத்வாவை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஸாக் அகாடமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மஜித் மஜிதி எடுத்துள்ள முகமத் - மெஸஞ்சர் ஆப் காட் படம் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது. எந்த முஸ்லிமும் இந்தப் படத்தைப் பார்க்கக் கூடாது. இந்தப் படத்தை இந்தியாவில் தடை செய்யுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மஜித் மஜிதி மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ‘பத்வா’ விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.எஸ். பேரணி தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.!
ராகுல்காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஏற்பட்ட அமளியால் நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு..!!
ராகுல் காந்தி தகுதிநீக்கம்; மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆலோசனை கூட்டம்!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,805 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: மேலும் 9 பேர் உயிரிழப்பு.! ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்
தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மலையாள நடிகரும் அரசியல்வாதியுமான இன்னசென்ட் காலமானார்!!
எந்த தடையும் மக்களை கட்டுப்படுத்தாது பாகிஸ்தானை சீரமைக்க பெரிய அறுவை சிகிச்சை தேவை: இம்ரான் கான் ஆவேசம்
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!