அதிகளவு கழிவு நீர் கலந்ததால் ஊட்டி ஏரியில் கடும் துர்நாற்றம்: படகு இல்லம் மூடல்
2015-09-10@ 13:02:44

ஊட்டி: ஊட்டி ஏரியில் கழிவுநீர்கலந்து கடும் துர்நாற்றம் வீசியதால், தேனிலவு படகு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டது. ஊட்டி ஏரியில்சுற்றுலாத்துறை சார்பில் படகு இயக்கப்பட்டு வருகிறது.இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக வருகிறது. இந்த கால்வாய் நகரின் மையப்பகுதியில் செல்கிறது.கால்வாயின் இருபுறமும் உள்ள ஓட்டல்கள், குடியிருப்பு,லாட்ஜ் உள்ளன.இவைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் கால்வாயில் வந்து ஏாியில் கலப்பதால் ஏாி மாசடைந்து வந்தது.இதையடுத்து,ஏரியை தூய்மைப்படுத்த கடந்த இரு ஆண்டுக்கு முன் தமிழக அரசு ரூ.4 கோடியே 27 லட்சம் ஒதுக்கியது. இதனைதொடா–்ந்து, கோடப்பமந்து கால்வாய் தூா்வாரப்பட்டது. ஏாியில் கழிவுநீா் கலக்காத வண்ணம் சுத்திகாிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.மேலும், நீரேற்றும் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டன.
இதில், ஏாியில் கழிவுநீா் கலப்பது தடுக்கப்பட்டது. ஏாியை தூய்மையாக வைக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டா் தலைமையிலான ஊட்டி ஏாி பாதுகாப்பு கமிட்டியும் அமைக்கப்பட்டது். இந்நிலையில் ஊட்டியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், சேறும் சகதியும் கலந்து நிறம் மாறி காணப்பட்டது. சில இடங்களில் கருமையான நிறத்தில் காணப்பட்டது. ஏாியை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஓட்டல்கள், காட்டேஜ்களில் இருந்து கழிவுநீா் நேரடியாக ஏாியில் திறந்து விடப்பட்டதாலேயே ஏாி நீா் கருப்பு நிறத்திற்கு மாறி கடும் துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழக கோவை மண்டல மேலாளா் சங்கா் தலைமையில் நகராட்சி, மின்வாாியம், மாசு கட்டுபாட்டு வாாிய அதிகாாிகள் நேற்று ஏாி,அருகே உள்ள காட்டேஜ், ஓட்டல்களிலும் ஆய்வு நடத்தினாா–்கள்.அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் கழிவு நீர் நேரடியாக ஏரியில் கலப்பதாலே நிறம் மாறியது மட்டுமின்றி, சுகாதர சீர்கேடு ஏற்பட்டு துர் நாற்றம் வீசியதும் தெரிய வந்தது.
எனினும், சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து சுற்றுலா வளா்ச்சி கழக மண்டல மேலாளா் சங்கா் கூறுகையில்,‘ ஏாியில் கழிவுநீரை திறந்து விடும் காட்டேஜ்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். ஏாியில் கழிவுநீரை திறந்து விடுபவா–்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, அவா்களின் கழிவுநீா் இணைப்புகள் துண்டிக்கப்படும். காட்டேஜ் நிா்வாகத்தினா் கழிவுநீா் சுத்திகாிப்பு தொட்டி அமைக்காமல் உள்ளனா். இது தொடா்பாக ஆய்வு நடத்தியுள்ளோம். இதன் அறிக்கை மாவட்ட கலெக்டாிடம் அளிக்கப்படும். ஏாியில் கழிவுநீா் மாசடைந்துள்ளதால், சாியாகும் வரை தேனிலவு படகு இல்லம் மூடப்படும்‘, என்றாா்.
மேலும் செய்திகள்
மயிலாடும்பாறை பகுதியில் சாம்பார் வெள்ளரி விளைச்சல் அமோகம்-போதிய விலை இல்லாததால் விவசாயிகள் கவலை
சிஎஸ்ஆர் நிதியில் பள்ளி, கல்லூரிகளில் சுகாதார பணிகள்-கவர்னர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு
பெரியகுளம் பகுதி மாந்தோப்புகளில் பூ... பூவா... பூத்திருக்கு மாம்பூ-மகசூல் அதிகமாகும் என மகிழ்ச்சி
மண்ணெண்ணெய் கேனுடன் வருவதால் உஷார் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு
வேலூர் அருகே பொய்கை மாட்டுச்சந்தையில் ₹1 கோடிக்கு வர்த்தகம்-வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சி
மனிதநேய வார நிறைவு விழா ஊட்டியில் 9 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி-ரூ.5.62 லட்சத்தில் வழங்கப்பட்டது
மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்
பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!
சீனாவில் வசந்த காலத் திருவிழா கோலாகலக் கொண்டாட்டம்: கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள் என உற்சாகம்..!
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!