SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.21 ஆயிரம் கோடியில் மேம்படுத்த முடிவு; குளச்சல் துறைமுகத்தை மத்திய அரசு ஏற்கிறது: பொன். ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

2015-09-04@ 00:08:08

புதுடெல்லி: குளச்சல் துறைமுகத்தை மத்திய அரசு ஏற்று, ரூ.21 ஆயிரம் கோடியில் மேம்படுத்த உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத்தை நாட்டின் மிகப்பெரிய சர்வதேச துறைமுகமாக விரிவுபடுத்த மத்திய அரசு முயற்சி  மேற்கொண்டுள்ளது. இதற்கு முழுஒத்துழைப்பு தருவதாக தமிழக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக, டெல்லியில் நேற்று மத்திய சாலை  போக்குவரத்து துறை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி: குளச்சல் துறைமுகத்தை மத்திய அரசு  ஏற்று நடத்த முழு ஒத்துழைப்பு தருவதாக தமிழக அரசு சார்பில் மத்திய கப்பல் போக்குவரத்து துறைக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

துறைமுகம் அமைக்க அடிப்படையான, துறைமுக பகுதிக்கும் பிரதான சாலைக்கும் இணைப்பு சாலை அமைப்பதற்கான ஆய்வுகள் குறித்து  ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சாலை வசதிகளை ஏற்படுத்தவும், ரயில் வசதிகளை ஏற்படுத்தவும் உடனடியாக ஆய்வுகள்  நடத்தி, 2 மாதங்களுக்குள் முழு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் இதற்காக 2003ல் தொடங்கப்பட்ட 4  வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை முடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. ரயில்வே துறை மூலமாக 2 வழிப்பாதை அமைக்கப்பட்டு கூடுதல்  வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த திட்டம் 3 கட்டங்களாக நடைபெறும், முதல்கட்ட பணிகளுக்காக ரூ.6,628 கோடியும், 2ம் கட்ட பணிகள் மற்றும் 3ம் கட்ட பணிகளுக்காக தலா  ரூ.7 ஆயிரம் கோடியாக, மொத்தம் ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இயற்கையாகவே இந்த துறைமுகம் அமைந்துள்ளது. 20 மீட்டர்  ஆழத்தில் கடல் உள்ளதால், சர்வதேச கப்பல் போக்குவரத்து பகுதிக்கு மிக அருகில் குளச்சல் அமைந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபடம்  10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 15 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும். இந்த திட்டம் அதிகபட்சம் 3 ஆண்டுகளில்  முடியும். இத்திட்டத்தின் மூலம் குமரி மாவட்டம் முதல் மதுரை வரையிலான தென்மாவட்டங்கள் அதிக பயனடையும்.

மதுரவாயல் திட்டம்: இதே போல் மதுரவாயல் சாலை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது. விரைவில் நல்ல  முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். மதுரவாயல் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னை துறைமுகத்திற்கே வரப்பிரசாதமாக அமையும். சேது  சமுத்திர திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இலங்கை செல்ல வேண்டியதில்லை

சர்வதேச கப்பல்கள் வந்து செல்ல இந்தியாவிலேயே எந்த துறைமுகமும் இல்லை.  தற்போது வரை, சரக்குகள் இலங்கை துறைமுகம் அல்லது  சிங்கப்பூர்  துறைமுகத்திற்கு சென்று தான் மற்ற நாடுகளுக்கு செல்கிறது. இந்த துறைமுகம்  மூலம் சரக்குகள் நேரடியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப  முடியும். கேரளாவில்  அமைய உள்ள விழிஞ்ஞம் துறைமுகத்தால் இந்த துறைமுகத்தின் வளர்ச்சி  பாதிக்காது.

is there a cure for chlamydia phuckedporn.com home std test
sms spy app phone monitoring software spy apps free

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

 • anna-15

  பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

 • gujarat-14

  கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்