ஆம்பூர் ஷமீல் அகமது மரணம் குறித்து சஸ்பெண்ட் இன்ஸ்பெக்டரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை
2015-08-06@ 14:46:49

வேலூர் : ஷமீல் அகமது மரணம் ெதாடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜியிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிகொண்டா அடுத்த குச்சிபாளையத்தை ேசர்ந்த பவித்ரா காணாமல் போனது தொடர்பான புகாரின்பேரில் ஆம்பூரை சேர்ந்த ஷமீல்அகமத்திடம் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த ஷமீல்அகமது, சிகிச்சை பலனின்றி ஜூன் 26ம் தேதி இறந்தார். இதனால் ஆம்பூரில் பயங்கர கலவரம் ஏற்பட்டது.
இதையடுத்து டிஜிபி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
விசாரணை தொடங்கிய நிலையில் மார்ட்டின் பிரேம்ராஜ் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மிளா வேட்டையாடியதாக மார்ட்டின் பிரேம்ராஜ் உள்பட 2 பேரை வனத்துறையினர் கைது செய்து பாளையகோட்டை சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் ஆம்பூர் ஷமீல் அகமது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த வேலூர் சிபிசிஐடி போலீசார் மார்ட்டின் பிரேம்ராஜை கைது செய்தனர். இதைதொடர்ந்து நேற்று காலை சிபிசிஐடி போலீசார் பலத்த பாதுகாப்புடன் மார்ட்டின் பிரேம்ராஜை வேலூர் ேஜ.எம்.2 கோர்ட் மாஜிஸ்திரேட் ரேவதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவருக்கு 5 நாள் காவல் அனுமதிக்கும்படி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் 3 நாள் அனுமதி அளித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து மார்ட்டின் பிரேம்ராஜை வேலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து எஸ்பி நாகஜோதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஷமீல் அகமதுவை கைது செய்தபோது, பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தெரிவித்த தகவல்களை வைத்தும், விசாரணை என்ற பெயரில் எந்ெதந்த இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டார்? அப்போது யார் யார் எல்லாம் உடன் இருந்தார்கள்? ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டதா? காணாமல் போன பவித்ராவை கண்டுபிடிக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது? போன்ற கேள்விகளை வைத்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் தெரிவிக்கும், அனைத்து பதில்களையும் போலீசார் எழுத்துபூர்வமாகவும், வீடியோவிலும் பதிவு செய்து கொண்டனர். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
கோவை மாவட்டம் சூலூர் அருகே அதிமுக நிர்வாகிக்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் சுவர் இடிந்து தொழிலாளி ஒருவர் உயிரிழப்பு
நாகர்கோவிலில் புதுப்பொலிவு பெறும் மாநகராட்சி பூங்கா: விளையாட்டு உபகரணங்கள் அதிகளவில் அமைக்க திட்டம்
களக்காடு பகுதியில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி: 1 கிலோ ரூ.26க்கு விற்பனை
இலங்கை தமிழர்களுக்கு யாசகர் ரூ.10 ஆயிரம் நிதி
வெம்பக்கோட்டை அகழாய்வில் பழங்கால குவளை கண்டெடுப்பு
புதுச்சேரி, வடதமிழகத்தில் பருவமழை மாற்றத்தால் செங்கல் உற்பத்தி பணிகள் பாதிப்பு: விலை மேலும் உயரும் ஆபத்து
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!