SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செயின்ட் ஸ்டீபன் கல்லூரி பாலியல் துன்புறுத்தல் விவகாரம்: முதல்வர் ராஜினாமா செய்யக்கோரி மாணவர்கள், பேராசிரியர்கள் போராட்டம்

2015-07-07@ 02:44:24

புதுடெல்லி: ஸ்டீபன் கல்லூரியில், ஆராய்ச்சி படிப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இவ்விகாரத்தை மூடி மறைக்க முயலும் முதல்வரை பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் டெல்லி பல்கலை. மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெண்கள் உரிமை ஆர்வலர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியராக பணிபுரிபவர் சதீஷ்குமார். இதே துறையில் பி.எச்டி படித்து வரும் மாணவிக்கு, சதீஷ்குமார் வழிகாட்டியாகவும் இருக்கிறார். இந்நிலையில், சதீஷ்குமார் தனக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தாக சம்பந்தப்பட்ட மாணவி ஒழுங்கு நடவடிக்கை குழுவிடமும் (ஐசிசி), முதல்வரிடமும் புகார் தெரிவித்தார்.

ஆனால், ஒழுங்கு நடவடிக்கை குழு, இந்த விவகாரத்தில் பாரபட்சம் பார்ப்பதாகவும், சதீஷ்குமாரை காப்பாற்ற முதல்வர் வல்சன் தாம்பு முயல்வதாகவும் கூறி மாணவி, ஐசிசியில் அளித்த புகாரை வாபஸ் பெற்றார். பின்னர், இந்த விவகாரம் தொடர்பாக சதீஷ்குமார் மற்றும் முதல்வருக்கு எதிராக மாணவி போலீசில் புகார் தெரிவித்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பேராசிரியர் சதீஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், முதல்வர் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும், டெல்லி பல்கலையின் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மகளிர் உரிமை ஆர்வலர்கள் கல்லூரியின் வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜினாமா செய்ய தயார்

செயின்ட் ஸ்டீபன் கல்லூரி முதல்வர் வல்சன் தாம்பு கூறுகையில், ‘ இது தொடர்பாக கல்லூரிக்குள்ளேயே விசாரணை நடந்து வருகிறது.  என் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் கல்லூரியின் நலன் கருதி அடுத்த நிமிடமே முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்’ என்றார்.

why do husbands have affairs link wife affair
venlafaxine forum mdwguide.com venlafaxine 150
cialis cvs coupon cialis cialis 20mg
discount coupons for prescriptions discount coupons for prescriptions discount coupon for cialis

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • niger-scl-15

    நைஜரில் பள்ளியில் ஏற்பட்ட தீயின் கோரப்பிடியில் சிக்கி 20 மாணவர்கள் உடல் கருகி பரிதாப பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்