உலக பேட்மின்டன் தரவரிசை சாய்னா நம்பர் 1
2015-03-29@ 00:28:26

புது டெல்லி: மகளிர் பேட்மின்டன் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நெஹ்வால் முதலிடத்துக்கு முன்னேறி மகத்தான சாதனை படைத்தார். இந்திய ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் அரை இறுதியில் நடப்பு நம்பர் 1 வீராங்கனை கரோலினா மரின் (ஸ்பெயின்) நேற்று அதிர்ச்சி தோல்வி அடைந்ததை அடுத்து, சாய்னா முதலிடம் பிடிப்பது உறுதியானது. இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது. அதிகாரப்பூர்வ தரவரிசைப் பட்டியலில் வரும் வியாழனன்று வெளியாகும்.
பைனலுக்கு முன்னேறினார்: தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்த உற்சாகத்துடன் அரை இறுதியில் களமிறங்கிய சாய்னா 2115, 2111 என்ற நேர் செட்களில் ஜப்பானின் யூய் ஹாஷிமோட்டோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். பைனலில் அவர் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானை எதிர்கொள்கிறார்.
மேலும் செய்திகள்
கடைசி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடுவோம்... அகர்வால் நம்பிக்கை!
சில்லி பாய்ன்ட்...
டெஃப்லிம்பிக்ஸ் போட்டியில் அசத்தல் தங்கம் வென்ற வீரர்களுக்கு சென்னையில் உற்சாக வரவேற்பு
இஸ்தான்புல்லில் நடைபெற்ற ஐபிஏ மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி: அபாரமான வெற்றி
ஐபிஎல் கிரிக்கெட் மும்பையை வீழ்த்தி ஐதராபாத் பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்க முனைப்பு
பஞ்சாபை வீழ்த்தி டெல்லி அபாரம் அணியின் வெற்றிக்கு உதவியதில் மிகுந்த மகிழ்ச்சி: ஆட்டநாயகன் ஷர்துல் தாகூர் நெகிழ்ச்சி
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!