SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏழை சிறுவர்களின் கல்விக்காக 107 ரூபாயை சேமித்து பிரதமருக்கு அனுப்பி வைத்த 6 வயது சிறுவன்

2015-03-19@ 00:08:22

புதுடெல்லி: ஏழை சிறுவர்களின் கல்விக்காக, தான் சேமித்து வைத்திருந்த 107 ரூபாயை, தனது பிறந்தநாளின்போது, பிரதமர் நிவாரண நிதிக்கு 6 வயது சிறுவன் அனுப்பி உள்ளான். அவனைப் பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி தானே கையெழுத்திட்டு பாராட்டு கடிதம் அனுப்பியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம், திவாஸ் மாவட்டத்தை சேர்ந்தவன் பாவ்யா. ஆறு வயதாகும் இந்த சிறுவன், யுகேஜி படித்து வருகிறான். தன்னுடைய பிறந்த நாளான ஜனவரி 25ஐ, ஏழைகளின் நலனுக்காக கொண்டாட விரும்பிய அவன், அன்று தனது உண்டியலை ஒரே போடாக போட்டு உடைத்தான். அதில் இருந்த காசுகளையெல்லாம் சேகரித்தபோது, 107 ரூபாய் சேர்ந்திருந்தது. இதையடுத்து, தனது தாத்தா சுனில் ஆதேவின் உதவியோடு, இந்த 107 ரூபாயை ஏழை சிறுவர்களின் கல்விக்காக பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தான் பாவ்யா. மேலும், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றையும் எழுதினான். இந்த விவரங்களை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி, ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தார். “பாவ்யா, ஏழை சிறுவர்களின் நலனுக்காக, பிரதமர் நிவாரண நிதிக்கு நீ பணம் அனுப்பி வைத்ததற்கு நன்றி. நாட்டில் உள்ள ஏழை குழந்தைகள் மீது அக்கறை கொண்டவனாக நீ எப்போதும்  இருக்க வேண்டும்Ó என்று, பாவ்யாவுக்கு மோடி பதில் கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் கடந்த 7ம் தேதி, சிறுவனின் கைக்கு கிடைத்தது.

இதுபற்றி, அவன் கூறும்போது, “நான் பள்ளிக்கு செல்லும்போதெல்லாம், ஏழை குழந்தைகளை பார்ப்பேன். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பேன். எனவேதான், என்னுடைய தாத்தாவின் உதவியோடு, மோடி மாமாவுக்கு கடிதம் எழுதினேன். அத்துடன், ஏழை சிறுவர்களின் நலனுக்காக 107 ரூபாயை அனுப்பி வைத்தேன். இதனை ஏற்றுக்கொண்ட மோடி, நான் பணம் அனுப்பி வைத்ததற்காக, நன்றி தெரிவித்து எனக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதனால் நான் மகிழ்ச்சியாக உள்ளேன்Ó என்றான்.  பாவ்யாவுடைய தாத்தா சுனில் ஆதே, கூறுகையில், “எப்போது பார்த்தாலும் கேள்விகளை கேட்டு கேட்டு, என் பேரன் என்னை படாதபாடு படுத்துவான். ஒரு சமயம் அவனை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தேன். அப்போது, ஏழை சிறுவர்கள் பள்ளிக்கு போகாமல் ஏன் இங்கேயே இருக்கிறார்கள் தாத்தா, என்று கேட்டான். அதற்கு, பணம் இல்லாததால் அவர்கள் செல்லவில்லை என்று கூறினேன்.
இந்த சம்பவம் அவனுடைய மனதில் நன்றாக பதிந்து விட்டது. இதையடுத்து, ஏழை சிறுவர்களின் நலனுக்காக உண்டியலில் காசுகளை சேமித்தான். அவற்றை பிரதமருக்கு அனுப்ப நான் உதவி செய்தேன்Ó என்றார். 6 வயது சிறுவனின் இந்த நடவடிக்கை, மத்தியப் பிரதேசத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இப்போது அனுப்பி யிருக்கும் 107 ரூபாயைவிட அதிக பணத்தை சேமித்து, அடுத்த ஆண்டு பிரதமருக்கு அனுப்ப, பாவ்யா விருப்பம் கொண்டுள்ளான். இதற்காக, இப்போது இருந்தே உண்டியலில் காசுகளை சேமிக்க தொடங்கி விட்டான் பாவ்யா.

i want to cheat on my husband i have cheated on my husband my husband cheated on me blog
plavix tonydyson.co.uk plavix plm
abortion pill procedures farsettiarte.it having an abortion
amoxicilline amoxicillin dermani haqqinda amoxicillin nedir

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்