தண்டவாளத்தில் விரிசல்: ரயிலை நிறுத்தி பலரது உயிரை காப்பாற்றிய 9 வயது புத்திசாலி சிறுவன்
2015-03-17@ 17:03:16

தவாங்கீர்: தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலால் ஏற்படவிருந்த பெரும் விபத்தை தவிர்த்த 9 வயதான புத்திசாலி சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. தவாங்கீர் மாவட்டத்தை சேர்ந்த அவங்கிர் கிராமத்தில் வசித்து வரும் மஞ்சுநாத் என்பவரின் மகன் சித்தேஷ் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறான். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை 6.30 மணிக்கு ரயில்வே தண்டவாளத்தை அந்த சிறுவன் கடக்க முயன்ற போது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தான்.
பின்னர் தனது தந்தையிடம் அதனை தெரிவித்த போது, அவர் விளையாட்டாக கூறுகிறான் என்று அதை பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார். இதுகுறித்து, சிறுவன் சித்தேஷ் கூறியதாவது, தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசலை கண்டதும் நான் பயந்து விட்டேன். எனது தந்தையிடம் இதுகுறித்து கூறுயதும், நான் விளையாட்டாக சொல்வதாக எனது தந்தை நினைத்ததால், நான் அவரை சம்பவ இடத்திற்கு இழுத்து சென்றேன் என்றான். அந்த நேரத்தில் சில ரயில்கள் வரும் வேளை நெருங்கியது. அப்போது அந்த வழியாக வரும் ரயில்களை நிறுத்த என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தோம் என்று மஞ்சுநாத் கூறினார்.
இதனையடுத்து, ரயில் வரும் நேரம் நெருங்கியதையடுத்து, திடீரென தனது மகன் சித்தேஷ் தனது சிகப்பு பனியனை எடுத்து ஒரு குச்சியில் சுத்திக்கொண்டு, தண்டவாளத்தில் சுமார் 7.30 மணியளவில் ரயில் வரும் பக்கம் ஓடினான். அப்போது, ஹீப்ளி-சித்ரதுர்கா பாசஞ்சர் ரயில் வந்து கொண்டிருந்தது. சிறுவன் சிகப்பு துணியை காட்டிக் கொண்டி ஓடி வருவதை கண்ட ரயிலின் ஓட்டுநர் ரயிலை நிறுத்திதாக சிறுவனின் தாயார் தெரிவித்தார். ரயிலில் உள்ள பயணிகள் அந்த சிறுவனை பாராட்டினர்.
இதனையடுத்து அந்த சிறுவனுக்கு தைரிய விருது வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ரயில்வே இன்ஜினியர் ஒருவர் அவனது தைரியத்தை பாராட்டி ரூ.500 வழங்கினார். என்று தவாங்கீர் ரயில்வே கோட்ட அதிகாரி திப்பையா தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
புலம்பெயர் தொழிலாளர்களின் வங்கிகணக்குகளில் பணம் செலுத்துவது மத்திய அரசின் கடமை : ராகுல் காந்தி ட்வீட்
தாயிடம் இருந்து தவறி தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை உயிரை பணயம் வைத்து மீட்ட ரயில்வே ஊழியருக்கு அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு..!!
கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ராணுவம் உதவ வேண்டும்: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள்
செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக பறந்த சிறிய ரக ஹெலிகாப்டர்!: புதிய வரலாற்று சாதனை படைத்து அசத்திய நாசா விஞ்ஞானிகள்..!!
டெல்லியில் 144வது நாளாக போராட்டம் : வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த முடியாது என விவசாயிகள் திட்டவட்டம்
1 கிலோ தக்காளி வேணுமா ? அப்ப கொரோனா தடுப்பூசி போடுங்க... மூக்குத்தி, சோப்பு, ஜூஸ்-ஐ தொடர்ந்து கவர்ச்சிகரமான அறிவிப்புகள்!!
கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்
20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!
19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்