பேஸ்புக் மூலம் பழகி பெண்களிடம் நகை மோசடி போலி டாக்டர் பிடிபட்டார்
2015-02-04@ 01:47:02

தாம்பரம்: பேஸ்புக் மூலம் பழகி, பல பெண்களிடம் இருந்து நகைகளை அபேஸ் செய்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். குரோம்பேட்டை பகுதியில் வசிக்கும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வீட்டில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக குரோம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில், வெளிநபர்கள் யாரும் வீட்டில் நுழைந்து நகைகளை திருடவில்லை என தெரிந்தது. இதையடுத்து, அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. வழக்கறிஞரின் மகளுக்கு, பேஸ்புக் மூலம் முகமது சானு என்பவர் அறிமுகமானார். இவர், தான் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிவதாக கூறினார். சமீபத்தில், இவர், தனக்கு கேரளாவில் மந்திரவாதி ஒருவரை தெரியும். அவரிடம் நகைகளை கொடுத்து பூஜை செய்தால், குடும்ப பிரச்னைகள் தீர்ந்துவிடும் என கூறியுள்ளார்.
அதை நம்பிய வழக்கறிஞரின் மகள், வீட்டில் உள்ள நகைகளை கொஞ்சம் கொஞ்சமாக முகமது சானுவிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் நகைகளை திருப்பி தரவில்லை.
அதன்பின், முகமது சானுவை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதை பெற்றோரிடம் மறைக்கவே வீட்டில் இருந்த நகை கொள்ளையடிக்கப்பட்டதாக நாடகமாடியது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து, பேஸ்புக்கில் இருந்த டாக்டர் முகமது சானு குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, ஜிப்மர் மருத்துவமனையில் அதுபோல் யாரும் வேலை பார்க்கவில்லை என தெரிந்தது. தீவிர விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் கோட்டைகுப்பம் கிராமத்தை சேர்ந்த அசன்அலி என்பவரது மகன் ரகமத்துல்லா (27), முகமது சானு என பெயர் மாற்றி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது பேஸ்புக்கை தொடர்ந்து கண்காணித்தபோது, தற்போது ஒரு இளம்பெண், அவருடன் தொடர்பில் இருப்பது தெரிந்தது. அந்த பெண்ணை சந்தித்த தனிப்படை போலீசார், ரகுமத்துல்லா பற்றிய விபரங்களை கூறியதும் அந்த பெண் அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து ரகுமதுல்லாவிடம் சந்தேகம் வராதது போல பேசி அவரை வரவழைக்க அந்த பெண்ணிடம் போலீசார் அறிவுறுத்தினர்.
அதன்படி அந்த பெண், குரோம்பேட்டையில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சில நாட்களுக்கு முன் ரகமதுல்லாவை வரவழைத்தார். அப்போது, அங்கு மாறு வேடத்தில் இருந்த தனிப்படை போலீசார், அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது: இவர், டாக்டர் சானு என்ற பெயரில் சென்னை, சேலம், கன்னியாகுமரி, பெங்களூர், திருநெல்வேலி என பல பகுதிகளிலும் பேஸ்புக் மூலம் பல பெண் களை நண்பர்களாக்கி உள்ளார். தன்னை டாக்டர் என காட்டிக்கொண்டதால், பலர் அவருடன் நட்பு வட்டாரத்தில் இணைந்துள்ளனர்.
இதில் யார் எளிதில் ஏமாறுவார் என்பதை அறிந்து அந்த பெண்ணின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு, அவர்களிடம் டாக்டர் போலவே நடித்து பழகி வந்துள்ளார். இதில் ஏமாறும் பெண்களிடம் நகைகளை வாங்கி கொண்டு அதை விற்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்துள்ளார். இவரிடம் ஏமாந்த பெண்கள் போலீ சில் புகார் செய்யாமல் இருந்ததால் இதுவரை போலீசில் சிக்கவில்லை. என தெரிவித்தனர். ரகமத்துல்லாவிடம் இருந்து சுமார் 40 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை நேற்று தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
வேளச்சேரி தனியார் விடுதியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்தவர் கைது
சீர்திருத்த பள்ளியில் சிறுவன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
போதையில் கலாட்டா செய்தவர்களுக்கு ஆதரவாக போலீஸ் நிலையத்தில் புகுந்து தகராறு செய்த பாஜ நிர்வாகி கைது
நாகப்பட்டினத்தில் ரூ.1.50 கோடி மதிப்புள்ள கடல் அட்டை பறிமுதல் 3 பேர் கைது
காரை மாத வாடகைக்கு ஒப்பந்தம் செய்து பல லட்சம் மோசடி செய்த பெண் கைது; 7 கார் பறிமுதல்
திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை கடத்தல்
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி