பெண் ஊழியர் உடை மாற்றியதை படமெடுத்த இளைஞருக்கு 6 மாத சிறை: நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு
2015-02-03@ 11:55:29

துபாய்: பிலிப்பைன்ஸ் பெண் உடை மாற்றுவதை செல்போனால் படம் எடுத்த இந்திய இளைஞருக்கு 6 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றிய வந்த 23 வயதான இந்திய இளைஞர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அங்கு பணிபுரியும் பெண் ஊழியரின் ஓய்வறைக்குள் சென்றுள்ளார்.
அந்த அறையில் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஊழியர் உடை மாற்றுவதை மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த அவர், தனது செல்போனிலும் படமெடுத்துள்ளார். தற்செயலாக திரும்பும் போது அவரைக் கண்ட பெண் கூச்சலிட்டதால், சகஊழியர்கள் திரண்டு அந்த இளைஞரை போலீசிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக துபாய் கோர்ட்டில் நடைபெற்ற விசாரணையின்போது குற்றத்தை ஒப்புக் கொண்ட அந்த இளைஞர் தன்னை மன்னித்து விடுதலை செய்யும்படியும் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து நேற்று தீர்ப்பளித்த துபாய் நீதிமன்றம், குற்றவாளிக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. தண்டனை காலம் முடிந்த பின் அந்த இளைஞர் துபாயை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
இலங்கையில் மின்சார நுகர்வு கட்டணம் கடும் உயர்வு: ரணில் விக்ரமசிங்கே அரசைக் கலைக்க மக்கள் வலியுறுத்தல்
நேட்டோ கூட்டமைப்பில் பின்லாந்து, சுவீடன் நாடுகள் இணையும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டு ஜோ பைடன் ஒப்புதல்
இந்திய மாணவர்கள் மீண்டும் படிப்பை தொடர நடவடிக்கை: சீன வெளியுறவு அமைச்சகம் தகவல்
வெள்ளை மாளிகை கோப்புகள் மாயம்.! முன்னாள் அதிபர் டிரம்ப் வீட்டில் எப்பிஐ சோதனை: அமெரிக்காவில் பரபரப்பு
சீனாவுக்கு போட்டியாக தைவான் போர் பயிற்சி: மேலும் பதற்றம் அதிகரிப்பு
கண்ணிவெடி தாக்குதலில் பாக். டிடிபி அமைப்பின் தளபதி பலி: ஆப்கான் சென்ற போது பயங்கரம்
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!