முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டுகளை இனி 'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் வீட்டிலேயே பெறலாம்
2015-02-03@ 11:04:07

டெல்லி: ஆன்லைனில் முன்பதிவு செய்யும் ரயில் டிக்கெட்டுகளை Cash on delivery முறையில் வீடு தேடி வந்து கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகமான ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தி உள்ளது. பயணம் செய்வதற்கான ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது, பணம் செலுத்துவதற்கு நெட் பேங்கிங் அல்லது கிரெடிட் கார்டு அல்லது ஏ.டி.எம். கார்டு வசதியையோ பயன்படுத்தும் முறை அமலில் உள்ளது. ஆனால், சிலருக்கு நெட் பேங்கிங் வசதி இருக்காது. சிலரோ தங்களது கிரெடிட் கார்டு மற்றும் ஏ.டி.எம். கார்டு குறித்த தகவல்களை வெளியிட தயங்குவார்கள்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு ஐ.ஆர்.சி.டி.சி புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி வழக்கம்போல ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். பின்னர் நாம் முன்பதிவு செய்த பயணச்சீட்டின் பிரிண்ட்டை எடுத்துக் கொண்டு, ஐ.ஆர்.சி.டி.சி. ஊழியர் நமது வீட்டிற்கு நேரிலேயே வருவார். அவரிடம் பயணச்சீட்டிற்கான பணத்தை கொடுத்து, டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த எளிய வசதியைப் பெற, பயணம் செய்வதற்கு 5 நாட்களுக்கு முன்னரே டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. டிக்கெட்டை வீட்டுக்கே வந்து அளிக்கும் சேவைக்காக தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு டிக்கெட் ஒன்றுக்கு ரூ.40ம், ஏ.சி. வகுப்பு டிக்கெட் ஒன்றுக்கு ரூ.60ம் கூடுதலாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த புதிய சேவை 200க்கும் மேற்பட்ட நகரங்களில் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் செய்திகள்
சுனாமி வேகத்தில் தாக்கும் 2ம் அலை: இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் 1.84 லட்சம் பேர் பாதிப்பு; 1027 பேர் பலி....மத்திய சுகாதாரத்துறை அறிக்கை.!!!
தமிழ்நாடு, கேளரா உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டம்: அனைத்து தரப்பு மக்களுக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து.!!!
தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும்: தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி தமிழில் புத்தாண்டு வாழ்த்து.!!!!
சர்ச்சைக்குரிய பேச்சுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்: மே. வங்க பாஜ தலைவர், சுவேந்து மீது நடவடிக்கை: தேர்தல் ஆணையம் அதிரடி
ஜனாதிபதி உத்தரவின்படி தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றார்
1.67 கோடி டோஸ் கைவசம் இருக்கும் தடுப்பூசி தட்டுப்பாடில்லை திட்டமிடுவதில் குளறுபடி: மாநிலங்கள் மீது மத்திய அரசு குற்றச்சாட்டு
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்