ஜிம்பாப்வே நாட்டில் மலைப்பாம்பை சாப்பிட்டவருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை
2015-02-03@ 10:40:34

மனிகாலேண்ட்: ஜிம்பாப்வே நாட்டில் மனிகாலேண்ட் மாகாணத்தில் உள்ள ஜிமுனியா பகுதியைச் சேர்ந்தவர் ஆர்க்வெல் மரம்பா ஆவார். 58 வயதான இவர் மலைப்பாம்புக் கறியை சாப்பிடுவதாக சில நாட்களுக்கு முன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலையடுத்து மரம்பாவின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். சோதனையில் சமையல் செய்யப்பட இருந்த மலைப்பாம்பின் இறைச்சி மற்றும் அதன் உலர்ந்த தோல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, மரம்பாவிடம் கோர்ட் விசாரித்தபோது, “நான் என்னுடைய முதுகுத்தண்டு வலி குணமாவதற்காகவே மலைப்பாம்பு சாப்பிடுகிறேன்.
முதன் முதலில் மலைப்பாம்பு சாப்பிடத் தொடங்கியதில் இருந்தே என் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் செய்திகள்
விடாமல் அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..! உலகளவில் 13.59 கோடி பேருக்கு பாதிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 29.38 லட்சம் ஆக உயர்வு
சில்லரை நிறுவனங்களை நசுக்க முயற்சி அலிபாபாவுக்கு ரூ.20,000 கோடி அபராதம்: சீனா அதிரடி
எங்கள் நாட்டு போர்க்கப்பல்கள் லட்சத்தீவில் நுழைய உரிமை இருக்கிறது: இந்தியாவுக்கு அமெரிக்கா விளக்கம்
இந்தோனேசியாவில் பயங்கர பூகம்பம்: 6 பேர் பரிதாப பலி
இந்தோனேஷியாவின் ஜாவா தீவு அருகே கடலுக்கு அடியில் 6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
பல மடங்கு அதிகரித்த கொரோனா பாதிப்பு... உயரும் உயிரிழப்புகள்: உலகளவில் பாதிப்பு எண்ணிக்கை 13.52 கோடியை கடந்தது!!!
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!