கணக்கு பண்ணுங்க
2015-02-03@ 09:47:59

பெருக்கல் கணக்குகளில் உள்ள எளிய முறைகளை அறிந்து கொள்ளும் வகையில், தற்போது எந்தவொரு எண்ணையும் 13ஆல் பெருக்கும் சுலப வழியை இங்கு காணலாம்.
===> முதலில் 13ஆல் பெருக்க வேண்டிய எண்ணின் இருபுறமும் பூஜ்ஜியத்தை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக 12303 என்ற எண்ணை 13ஆல் பெருக்கும் போது, 12303ன் இருபுறமும் பூஜ்ஜியத்தை சேர்க்க வேண்டும்.
12303 ===> 0 1 2 3 0 3 0
பின்னர் பூஜ்ஜியம் சேர்க்கப்பட்ட எண்ணின் வலது புறத்திலிருந்து இரண்டு, இரண்டு எண்களை கோர்வையாக எடுத்துக்கொண்டு, முதல் எண்ணை 3 உடன் பெருக்கி கொள்ள வேண்டும். வந்த விடையுடன் இரண்டாம் எண்ணை கூட்டி எழுதிக்கொள்க.
இதில் பூஜ்ஜியம் சேர்க்கப்பட்ட எண்ணான 0123030&ல் கடைசி எண்களான 3 0 ஐ எடுத்துக்கொண்டு முதல் எண்ணாண 3 ஐ 3 ஆல் பெருக்க வரும் விடை 9ஐ அடுத்த எண்ணான 0 உடன் கூட்டிக் கொள்க.
3 0 ==> 3 * 3 = 9 ==> 9 + 0 ===> 9
தற்போது இதேபோல் அடுத்த இரண்டு எண்களாக 0 3 ஐ எடுத்துக்கொண்டு, இதில் 0 ஐ மூன்று உடன் பெருக்கி, வரும் விடையை 3 உடன் கூட்ட வேண்டும்.
0 3 ==> 0 * 3 = 0 ==> 0 + 3 ===> 3
அடுத்த இரண்டு எண்களாக 3 0 ஐ எடுத்துக்கொண்டு, இதில் 3 ஐ மூன்று உடன் பெருக்கி, வரும் விடையை 0 உடன் கூட்ட வேண்டும்.
3 0 ==> 3 * 3 = 9 ==> 9 + 0 ===> 9
அடுத்த இரண்டு எண்களாக 2 3 ஐ எடுத்துக்கொண்டு, இதில் 2 ஐ மூன்று உடன் பெருக்கி, வரும் விடையை 3 உடன் கூட்ட வேண்டும்.
2 3 ==> 2 * 3 = 6 ==> 6 + 3 ===> 9
அடுத்த இரண்டு எண்களாக 1 2 ஐ எடுத்துக்கொண்டு, இதில் 1 ஐ மூன்று உடன் பெருக்கி, வரும் விடையை 2 உடன் கூட்ட வேண்டும்.
1 2 ==> 1 * 3 = 3 ==> 3 + 2 ===> 5
அடுத்த இரண்டு எண்களாக 0 1 ஐ எடுத்துக்கொண்டு, இதில் 0 ஐ மூன்று உடன் பெருக்கி, வரும் விடையை 1 உடன் கூட்ட வேண்டும்.
0 1 ==> 0 * 3 = 0 ==> 0 + 1 ===> 1
தற்போது விடையாக வந்த எண்களை வலமிருந்து இடமாக எழுதிவர, 159939 என்ற விடை எளிதாக கிடைக்கிறது.
மற்றுமொரு உதாரணமாக,
15726 * 13 = ?
0 1 5 7 2 6 0
6 0 ==> 6 * 3 = 18 ==> 18 + 0 ===> 18
இதில், ஒன்றாம் இலக்கம் 8 எடுத்துக்கொண்டு 1 மீதியதாக கொள்க
2 6 ==> 2 * 3 = 6 ==> 6 + 6 ===> 12
இவற்றுடன் பழைய மீதி 1 ஐ கூட்ட வரும் 13ல், 3ஐ எடுத்துக்கொண்டு 1ஐ மீதியாக கொள்க
7 2 ==> 7 * 3 = 21 ==> 21 + 2 ===> 23
இவற்றுடன் பழைய மீதி 1 ஐ கூட்ட வரும் 24ல் 4ஐ எடுத்துக்கொண்டு 2ஐ மீதியாக கொள்க
5 7 ==> 5 * 3 = 15 ==> 15 + 7 ===> 22
இவற்றுடன் பழைய மீதி 2 ஐ கூட்ட வரும் 24ல் 4ஐ எடுத்துக்கொண்டு 2ஐ மீதியாக கொள்க
1 5 ==> 1 * 3 = 3 ==> 3 + 5 ===> 8
இவற்றுடன் பழைய மீதி 2 ஐ கூட்ட வரும் 10ல் 0ஐ எடுத்துக்கொண்டு 1ஐ மீதியாக கொள்க
0 1 ==> 0 * 3 = 0 ==> 0 + 1 ===> 1
இவற்றுடன் பழைய மீதி 1 ஐ கூட்ட வரும் 2ஐ எடுத்துக்கொள்க.
தற்போது பிரித்தெழுதிய எண்களை ஒன்றாக எடுத்தெழுத 2 0 4 4 3 8
ஃ 15726 * 13 = 204438...
மேலும் செய்திகள்
நவ.1-ம் தேதி 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் தொடக்கம்; சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கற்றலே வாழ்வுக்கு நலமளிக்கும்
தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுகள்: தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு
உயர்கல்விக்கு உதவும் புல்பிரைட்-நேரு மாஸ்டர்ஸ் ஃபெல்லோஷிப் உதவித்தொகை
டிப்ளமோ/ பி.இ. படித்தவர்களுக்கு இந்திய அணுசக்தி நிறுவனத்தில் பயிற்சி
10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்தவர்களுக்கு டெல்லி பல்கலைக்கழகத்தில் வேலை
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!