விபத்தில் மூளைச்சாவு பைக் மெக்கானிக் உடல் உறுப்புகள் தானம்
2015-02-03@ 02:19:49

வண்ணாரப்பேட்டை : சென்னை வண்ணாரப்பேட்டை மேற்கு கிருஷ்ணப்ப கிராமணி தோட்டம் தெருவை சேர்ந்தவர் உமாபதி (52). பைக் மெக்கானிக். இவரது மனைவி உஷா. இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 31ம் தேதி இரவு வேலை முடிந்து உமாபதி வீட்டுக்கு புறப்பட்டார். தண்டையார்பேட்டை மணிகூண்டு அருகே இரவு 8.30 மணியளவில் சாலையை கடந்தபோது, அவ்வழியாக வேகமாக சென்ற ஆட்டோ, உமாபதி மீது பயங்கரமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தலையில் படுகாயமடைந்த அவர், உயிருக்கு போராடினார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனடியாக அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நேற்று முன்தினம் உமாபதிக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.புகாரின்படி கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திய ஆட்டோவை தேடி வருகின்றனர்.
இதற்கிடையில் மூளைச் சாவு அடைந்த உமாபதியின் உடல் உறுப்புகளை தானம் செய்வது குறித்து மருத்துவ குழுவினர், அவரது உறவினர்களிடம் பேசினர். அவர்களும், அதற்கு சம்மதித்தனர். இதை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் இதயம், கல்லீரல், 2 கிட்னி ஆகியவை அகற்றப்பட்டன. பின்னர் அவற்றை ஸ்டான்லி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அவற்றை ஒப்படைத்தனர்.
மேலும் செய்திகள்
பள்ளி மாணவர்களுக்கிடையே வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் விதமாக ஊஞ்சல், தேன் சிட்டு இதழ் திட்டத்திற்கு ரூ.7.15 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு அறிவிப்பு
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, மெரினா கடற்கரையில், போதை ஒழிப்பு விழிப்புணர்வு: சென்னை காவல் ஆணையர் தொடங்கிவைத்தார்
தமிழ்நாடு அரசின் தாய் - சேய் நல பெட்டக டெண்டருக்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு ஆகஸ்ட் 3-ம் தேதி வரை அவகாசம்
தமிழக விமானநிலையங்களில் பயணிகள் எண்ணிக்கை 19 லட்சமாக அதிகரிப்பு
இந்து சமய அறநிலையத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வரும் திருக்கோயில் பெருந்திட்டப் பணிகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!