அமோனியா வாய்வு கசிவா? கண் எரிச்சலால் மக்கள் அவதி
2015-02-03@ 02:18:28

திருவொற்றியூர் : மணலியில் உரத்தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய அமோனியா வாய்வால் கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் கதவு, ஜன்னல்களை மூடிக்கொண்டு வீடுகளுக்குள் முடங்கினர். மணலி பாடசாலையில் நேற்று மாலை 6 மணிக்கு பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் அவ்வழியாக நடந்து சென்றவர்கள், வாகனங்களில் சென்றவர்களுக்கு கண் எரிச்சல், லேசான மயக்கம் ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் அமோனியா வாய்வு கசிவு ஏற்பட்டிருக்கோ என நினைத்து வீட்டின் கதவு, ஜன்னல்களை மூடிவிட்டு உள்ளே முடங்கினர். இதுபோல் சாமன்நகர், அரிகிருஷ்ணாபுரம், அம்பேத்கர்நகர், கலைஞர்நகர் போன்ற பகுதிகளிலும் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்களும் அச்சமடைந்தனர். இதுகுறித்து மணலி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த போலீசார் மணலில் உள்ள உரத்தொழிற்சாலையில் அமோனியா வாய்வு கசிவு ஏற்பட்டுள்ளதா? என சோதனை நடத்தினர். இந்த சம்பவத்தால் மணலி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘அடிக்கடி அமோனியா வாய்வு வெளியேறி துர்நாற்றம் வீசுவதால் குழந்தைகளும் முதியோரும் பாதிக்கப்படுகின்றனர். மணலில் உள்ள உரத்தொழிற்சாலையால்தான் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, தொழிற்சாலை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு அமோனியா வாய்வால் துர்நாற்றம், கண் எரிச்சல் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றனர்.
மேலும் செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்; முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்; வானிலை ஆய்வு மையம் தகவல்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு தொடர்ந்து செயல்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் வியாபாரிகள் பயணம்
கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அவதி
புக்கத்துரை கிராமத்தில் தரிசு நிலங்களை வேளாண் உற்பத்தி ஆணையர் ஆய்வு: விவசாயிகளுடன் கலந்துரையாடல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!