SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இறை வணக்கத்தில் மாணவர்கள் டெங்கு ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

2015-02-03@ 02:11:49

தாம்பரம் : தமிழகத்தில் பள்ளி மாணவர்கள், டெங்கு ஒழிப்பிற்கு உறுதிமொழி வாசிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால், ராஜபாளையத்தில் பலர் இறந்தனர். மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதால்,  சுகாதார துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் டெங்கு ஒழிப்பு  நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக, பள்ளி மாணவர்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டெங்கு பரப்பும் ஏடிஎஸ் கொசுக்களை ஒழிப்பதற்கு, அனைத்து பள்ளிகளிலும் தினமும் இறை வணக்கத்தின் போது, டெங்கு ஒழிப்பு உறுதி மொழியை மாணவர்கள் ஏற்க வேண்டும். வீட்டில் உள்ள தண்ணீரை மூடி வைக்க வேண்டும். மழைநீர் தேங்காமல், உரல், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எனது வீட்டை சுத்தப்படுத்துவேன். இதை எனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் பொதுமக்களிடமும் எடுத்துக்கூறுவேன். இவ்வாறு தலைமை ஆசிரியர்கள் முன் மாணவர்கள், உறுதிமொழி ஏற்க வேண்டும். அதன் படி தாம்பரம் நகராட்சியில் 14 பள்ளிகள், பல்லாவரம் நகராட்சியில் 43 பள்ளிகள், பம்மலில் 12 பள்ளிகள் மற்றும் பிற நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நேற்று உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதுகுறித்து, நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், டெங்கை ஒழிப்பதற்கு மாணவர்கள் பங்கு முக்கியம். மாணவர்களிடம் இந்த கருத்தை பரப்பினால், ஒவ்வொரு வீட்டிற்கு சென்று நாங்கள் கருத்துக்களை பிரதிபலித்தது போல் அமையும் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்