ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்க வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து மண்டலங்களில் தொழிற்சங்கம் நாளை ஆர்ப்பாட்டம்
2015-02-03@ 02:04:44

சென்னை : போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்த விவகாரம் தொடர்பாக நாளை தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படுகிறது. சென்னையில் 7ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான 12வது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2013, செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், தமிழக அரசு இதற்கான பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்பட 11 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இணைந்து கடந்த டிசம்பர் 28ம் தேதி முதல் 31ம் தேதி வரை மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 12ம் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடுதல் நிதிதுறை செயலாளர் உமாநாத் தலைமையில் 14 கொண்ட குழுவை தமிழக அரசு நியமித்தது. இந்த குழு நியமித்து 1 மாத காலமாகியும் இன்னும் பேச்சுவார்த்தை நடப்பதற்கான தேதி அறிவிக்கப்படாததால், அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளும் அதிருப்தியில் உள்ளனர்.
இந்நிலையில், நேற்று மாலை பல்லவன் சாலையில் உள்ள தோமுச அலுவலகத்தில் 11 போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில், தொமுச மாநகர பொருளாளர் பன்னீர்செல்வம், சிஐடியு மாநகர பொது செயலாளர் பாலகிருஷ்ணன், ஏஐடியுசி கஜேந்திரன், ஐஎன்டியூசி சுப்புராயன், டிஎம்எஸ் மீனாட்சி உள்பட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் சிஐடியு மாநகர பொது செயலாளர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி: பேச்சுவார்த்தை குழு அறிவித்து 1 மாதத்திற்கு மேல் ஆகியும் எந்த தகவலும் இல்லை. இடைக்கால நிவாரணமும் முழுமையாக வழங்கப்படவில்லை. எனவே, இதனை கண்டித்து நாளை சென்னையை தவிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தவுள்ளோம். வரும் 7ம் தேதி சென்னை பல்லவன் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பின்னர் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
தொ.மு.ச அழைப்பு: முன்னதாக தொமுச பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த டிசம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி முடிய வேலைநிறுத்தம் நடைபெற்றது. அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை ஒட்டி டிசம்பர் 31ம் தேதி வேலைநிறுத்தம் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஊதிய பேச்சு வார்த்தையை நடத்த குழு அமைத்து விரைவில் பேச்சுவார்த்தையை துவக்க அமைச்சர் ஒப்புக் கொண்டார். அதனடிப் படையில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது.
வேலைநிறுத்தம் முடிந்து 1 மாதகாலமாகியும் இதுவரை பேச்சு வார்த்தை துவங்கப்படவில்லை. பேச்சுவார்த்தைக்கான தேதியும் அறிவிக்கப்படவில்லை. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவக்க கோரியும் போக்குவரத்துக்கழக நிர்வாகங்களின் தொழிலாளர் விரோத நடவடிக்கை களை கண்டித்தும் 4ம் தேதி(நாளை) அனைத்து மண்டலங்களிலும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் வருகிற 7ம் தேதி மாலை 4 மணியளவில் பல்லவன் இல்லம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
மிரட்டும் கொரோனா வைரஸ்: சென்னையில் அடுத்த 20 நாட்கள் நெருக்கடியான காலமாக இருக்கும்..! மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல்
மின்னல் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா: தடுப்பு நடவடிக்கை குறித்து மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை..!
2 முறை தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்போது தீவிர தொற்று, உயிரிழப்பு ஏற்படாது
ஜனாதிபதி, பிரதமர் புகைப்படம் வைப்பது குறித்து அரசு அலுவலகங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு
உரிய அனுமதி பெறாத டேங்கர் லாரிகள் தண்ணீர் எடுத்துச்செல்ல அனுமதிக்க முடியாது: உயர்நீதிமன்றம் உத்தரவு
ரயில் சேவையில் இன்று மாற்றம்
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!