தாய் அதிகளவு பாலூட்டியதால் குழந்தை மூச்சுத்திணறி சாவு
2015-02-03@ 02:02:32

கீழ்ப்பாக்கம் : சென்னை மாங்காடை சேர்ந்தவர் சீனிவாசன்(32). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கவிதா(25). இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாமல் இருந்தனர். கடந்த 7 மாதத்திற்கு முன்பு கவிதா கர்ப்பமானார். இந்நிலையில், கவிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 9ந்தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிசேரியன் மூலம் 2 கிலோ எடையுள்ள பெண் குழந்தை பிறந்தது.
குழந்தையை டாக்டர்கள் பச்சிளம் குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வந்தனர். கவிதா சர்க்கரை நோயாளி என்பதால் அவரை தனியாக வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். கடந்த 24ந்தேதி அன்று குழந்தையை டிஸ்சார்ஜ் செய்து தாய் இருந்த வார்டில் சேர்த்தனர். நேற்று மாலை கவிதா தனது குழந்தைக்கு பால் ஊட்டிய பொழுது குழந்தை மூச்சு திணறி இறந்தது.
மேலும் செய்திகள்
மதுரை திருமங்கலத்தில் டீயில் போதை மருந்து கலந்து கைதிகளுக்கு சப்ளை: 2 போலீசார் கைது
திருட்டு வழக்கில் பறிமுதலான வெள்ளாட்டை காவல் நிலையத்தில் கட்டி வைத்து பராமரிக்கும் போலீஸ்
ரூ.3 கோடி இன்சூரன்ஸ் தொகை பெற காருடன் கணவரை எரித்து கொன்ற மனைவி
அரக்கோணம் அருகே இரட்டை கொலை: உறவினர்களிடம் சடலங்கள் ஒப்படைப்பு
சென்னையில் இருந்து கும்பகோணம் சென்றார்: போலீசார் விரட்டிய போது குளத்தில் குதித்த ரவுடி சாவு
கோயம்பேடு பஸ் நிலையத்தில் பயங்கரம்: பெட்ரோல் ஊற்றி எரித்து கள்ளக்காதலி படுகொலை
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!