திருமுல்லைவாயல் அருகே கள்ள துப்பாக்கியுடன் எஸ்ஐ மகன் கைது
2015-02-03@ 02:00:54

சென்னை, பிப்.3: கள்ள துப்பாக்கியுடன் பைக்கில் சுற்றிய எஸ்ஐ மகன் உள்பட 2 பேர் வாகன சோதனையில் சிக்கினர். இவர்களுக்கு நக்சலைட்களுடன் தொடர்பு உள்ளதா? என போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர். ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் சிடிஎச் சாலையில் தனியார் பள்ளி அருகே செக்போஸ்ட் உள்ளது. இங்கு, நேற்று காலை எஸ்ஐ முத்துராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் 2 வாலிபர்கள் வேகமாக சென்றனர். அவர்களை போலீசார் மடக்கி நிறுத்த முயன்றனர். ஆனாலும், அவர்கள் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றனர். உடனே போலீசார், அவர்களை விரட்டி சென்று மடக்கினர். பைக்கை சோதனை செய்தபோது, பெட்டியில் ஒரு துப்பாக்கி, 4 தோட்டாக்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, துப்பாக்கிக்கு உரிய ஆவணம் இல்லை. மேலும் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவர்களை திருமுல்லைவாயல் காவல் நிலையம் கொண்டு சென்றனர். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.
அதில், ஆவடி அடுத்த அண்ணனூர் திருக்குறள் மெயின் ரோட்டை சேர்ந்த நடராஜன் என்பவரது மகன் சைமன் ராஜா (36), திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் குடியிருப்பை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரின் மகன் ராஜா (34) என தெரிந்தது. இருவரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் சூபர்வைசராக உள்ளனர். ராஜாவின் தந்தை பாலசுப்பிரமணியம் சென்னை அசோக்நகர் காவல் நிலையத்தில் எஸ்ஐயாக பணிபுரிவதும் தெரியவந்தது.மேலும், இருவரும் கடந்த டிசம்பரில் ஐதராபாத்தில் உள்ள ஒரு நண்பரை அழைத்துக்கொண்டு அசாம் மாநிலம் சென்று ரூ.70 ஆயிரம் கொடுத்து, ஒரு துப்பாக்கி, 4 தோட்டாக்கள் வாங்கியுள்ளனர். சென்னை வந்த அவர்கள், தஞ்சாவூரை சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திகேயன் என்பவருக்கு துப்பாக்கியை கொடுப்பதற்காக, சைமன் ராஜா வீட்டில் மறைத்து வைத்துள்ளனர்.
இதுதொடர்பாக, போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர். சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கள்ள துப்பாக்கிகளை சப்ளை செய்தார்களா, இவர்களின் பின்னணியில் யார் யார் உள்ளனர். தமிழகம், ஆந்திரா உள்பட பல மாநிலங்களின் காட்டுப்பகுதியில் நக்சலைட்கள் ஆதிக்கம் உள்ளதால், அவர்களுடன் தொடர்பு உள்ளதா என போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்துகின்றனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, 4 தோட்டாக்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கை அரபி பாடசாலை ஆசிரியர் கைது
13 வயது சிறுமி பலாத்காரம்; தாயின் 2வது கணவருக்கு 30 வருடம் சிறைதண்டனை
மயிலாடுதுறையில் நள்ளிரவில் பயங்கரம்; வன்னியர் சங்க நிர்வாகி சரமாரி வெட்டிக்கொலை: 10 பேரை பிடித்து போலீஸ் விசாரணை
திருவள்ளூர் அருகே ரூட்தல பிரச்னையில் கல்லூரி மாணவரை வெட்டிய 3 மாணவர்கள் அதிரடி கைது
துபாயில் இருந்து கடத்தி வந்த 300 கிராம் தங்க பிஸ்கெட்டுகளை பறித்து சென்ற கும்பல் கைது: கடலூரில் போலீசார் அதிரடி
வீட்டில் பதுக்கிய ரூ.1 கோடி கடல் அட்டை பறிமுதல்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...