வடசென்னை மக்களுக்காக 250 மில்லி ஆவின் பால் பாக்கெட் இன்று முதல் விற்பனைக்கு வருகிறது
2015-02-03@ 01:57:09

சென்னை : சென்னையில் தற்போது ஒரு லிட்டர் மற்றும் அரை லிட்டர் அளவு கொண்ட பால் பாக்கெட்டை மட்டும் விற்பனை செய்து வருகிறது. கடந்த நவம்பர் 1ம் தேதி முதல் ஒரு லிட்டர் ஆவின் பாலின் விலை ஸீ24ல் இருந்து ஸீ34 ஆக உயர்த்தப்பட்டது. இவ்வளவு தொகை கொடுத்து பால் வங்குவது சிரமாக உள்ளது என்று குடிசைவாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஏழை எளிய மக்கள் ஆவின் பாலை வாங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க ஆவின் நிர்வாகம் உயர் அதிகாரிகளில் தலைமையில் ஆலோசனை கூட்டங்களை நடத்தியது. இதனடிப்படையில் ரூ.11க்கு கால் லிட்டர்(250மில்லி) பால் பாக்கெட் சில்லறை விலையில் விற்பனை செய்ய முடிவு செய்தது.
இது தொடர்பாக ஆவின் உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஆவின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் நேற்று எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் இன்றுமுதல் வடசென்னை பகுதியான திருவொற்றியூர், ராயபுரம், கொருக்குபேட்டை, வியாசர்பாடி பகுதிகளில் கால் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகளை சில்லறை விலையில் விற்பனை செய்யப் படுகிறது.
மேலும் செய்திகள்
சித்திரை முதல் நாளான இன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட அனுமதி: தமிழக அரசு உத்தரவு
கும்பமேளாவில் பங்கேற்ற 102 பேருக்கு கொரோனா: முககவசம், சமூக இடைவெளி இல்லை பலருக்கு பரவி இருக்கும் அபாயம்
பெண் வியாபாரியிடம் காய்கறி, பழங்கள் திருட்டு
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ரயில்வே ஊழியர் பரிதாப பலி: தனியார் மருத்துவமனையை உறவினர்கள் திடீர் முற்றுகை
நன்னடத்தை விதி மீறிய ரவுடிக்கு 351 நாள் சிறை
திருநங்கை தீக்குளித்து சாவு
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்