மோடியின் 7 மாத ஆட்சியில் எந்த மாற்றமும் தெரியவில்லை
2015-02-03@ 01:27:14

புதுடெல்லி: மோடி தலைமையில் பாஜ ஆட்சி ஏற்பட்டு ஏழு மாதங்களாகி விட்டது; ஆனால், பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை. இந்த ஆண்டிலாவது நல்ல மாற்றங்கள் ஏற்படும்; தொழில்துறைக்கு பலன் தரும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்று தொழில் நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன. தொழில் நிறுவனங்கள் இடையே நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஒரு சர்வேயை, தொழில் நிறுவன கூட்டமைப்பு அசோசெம் சமீபத்தில் எடுத்தது. சர்வேயில் தெரியவந்த தகவல்கள்: ஐ சர்வேயில் பங்கேற்ற 54.2 சதவீதம் நிறுவனங்கள், மோடி ஆட்சி ஏற்பட்ட இந்த ஏழு மாதங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் தெரியவில்லை என்றனர்.
* ‘இப்படி இருந்தாலும் அடுத்த ஆறு மாதங்களில் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்பட்டு தொழில்துறைக்கு பலன் கிடைக்கும்’ என்று இவர்கள் உட்பட 62.5 சதவீதம் நிறுவனங்கள் கருத்து தெரிவித்தன.
* உள்நாட்டு முதலீட்டு திட்டங்களில் அடுத்த இரண்டு மாதங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று 45.8 சதவீதம் நிறுவனங்கள் கூறின.
* ஏற்றுமதி சதவீதம் பெரிய அளவில் உயரவில்லை. பட்ஜெட்டுக்கு பின்னர் மாற்றம் தெரியலாம். * அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் பன்னாட்டு, தனியார் நிறுவன வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. * வர்த்தகம் பெருக வாய்ப்புகள் உள்ளது. அடுத்த சில மாதங்களில் சந்தை விற்பனை, நிறுவன லாபம் அதிகரிக்கும் என்று 58.3 சதவீதம் நிறுவனங்கள் கூறியுள்ளன. இந்த சர்வேயை அசோசெம் அமைப்பு கடந்த டிசம்பர் மாதம் எடுத்தது. ‘தொழில் நிறுவனங்களுக்கு இப்போது சற்று
அதிருப்தி இருந்தா லும், இன்னும் நம்பிக்கை போகவில்லை’ என்று இந்த சர்வே மூலம் தெரிவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
மேலும் செய்திகள்
இந்தியாவில் ஒரே நாளில் 15,754 பேருக்கு கொரோனா... 47 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
மகாராஷ்டிராவில் ஏகே 47 துப்பாக்கி, குண்டுகளுடன் கரை ஒதுங்கிய படகு தீவிரவாதிகள் நுழைந்து விட்டதாக பீதி
ஏலம் எடுத்தவர்களுக்கு கடிதம், 5ஜி சேவைக்கு தயாராகுங்கள்; ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு
முல்லைப் பெரியாறு பேபி அணையில் 15 மரங்களை வெட்ட உடனடி நடவடிக்கை; கேரள வனத்துறைக்கு உத்தரவு
வங்கியில் வைக்கப்பட்டு இருந்த ரூ.11 கோடி சில்லறை மாயம்; 25 இடங்களில் சிபிஐ ரெய்டு
கொரோனா பலிகளை மறைத்த குஜராத் அரசு; அமெரிக்க நிபுணர்கள் அதிர்ச்சி அறிக்கை
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...