வரிச்சலுகை நீட்டிக்காத நிலையிலும் ஜனவரியில் வாகனங்கள் விற்பனை அதிகரிப்பு
2015-02-03@ 01:20:47

புதுடெல்லி: மத்திய அரசு கலால் வரி சலுகையை ரத்து செய்த போதிலும் கார் விற்பனை கடந்த மாதத்தில் அதிகரித்துள்ளது. குறிப்பாக மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ், ஹோண்டா, டொயோட்டா நிறுவன கார்கள் விற்பனை முந்தைய ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மாதத்தில் அதிகரித்துள்ளது. மாருதி நிறுவன உள்ளூர் விற்பனை 9 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 1,05,559 கார்களை கடந்த மாதம் விற்றுள்ளது. இதுபோல், ஹூண்டாய் 34,780 கார்கள் விற்று 4 சதவீதம், டாடா மோட்டார்ஸ் 13,047 கார்கள் விற்று 19 சதவீதம், ஹோண்டா நிறுவனம் 18,331 கார்களை விற்று 17 சதவீதம், டெயோட்டா கிர்லோஸ்கர் 12,650 கார்கள் விற்று 16 சதவீதம் விற்பனையை அதிகரித்துள்ளன.
இருப்பினும், போர்டு இந்தியா விற்பனை 14.79 சதவீதமும், மகிந்திரா அண்டு மகிந்திரா 26 சதவீதம், ஜெனரல் மோட்டார்ஸ் 16 சதவீதம் விற்பனை சரிந்துள்ளன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தபோது கார்கள், பல்பயன்பாட்டு வாகனங்கள் (எஸ்யுவி), டூ வீலர்கள் ஆகியவற்றுக்கு கலால் வரி விலக்கு அளிக்கப்பட்டது. பாஜ தலைமையிலான புதிய அரசு மத்தியில் பொறுப்பேற்ற பிறகு கலால் வரி சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்தது. இந்த சலுகையை டிசம்பருக்கு பிறகு (மீண¢டும்) நீட்டிக்கவில்லை. இதனால் கார் விலை உயர்ந்து விற்பனை சரிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. என¤னும் ஜனவரியில் விற்பனை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
தங்கம் விலை சவரனுக்கு 80 அதிகரிப்பு
ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்க விலை..!!! சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.38,040க்கு விற்பனை!!
தங்கம் விலை சவரனுக்கு 160 அதிகரிப்பு
மீண்டும் 38 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை; ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.38,120க்கு விற்பனை.!
தங்கம் விலை கம்மி.. நகை வாங்க நல்ல நேரம் :சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,960க்கு விற்பனை!!
தங்கம் விலை ஒரு சவரனுக்கு 80 குறைந்தது
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!