4 குழந்தைகளை பெற்றெடுக்க சொன்னேன் 40 நாய்க்குட்டிகளை வளர்க்க சொல்லவில்லை
2015-02-03@ 01:06:28

புதுடெல்லி: இந்துக்களை எல்லாம் நான்கு குழந்தைகளை பெற்று வளர்க்கத்தான் சொன்னேன்; 40 நாய்க்குட்டிகளை அல்ல... - பாரதிய ஜனதாவை சேர்ந்தவரும், இந்துத்வாவை பரப்பி சர்ச்சை களை கிளப்பி வருபவருமான சாத்வி ப்ராச்சி தான் இப்படி கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாத்வி, கடந்த 2012ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். மத்தியில் பாஜ ஆட்சி ஏற்பட்டவுடன் தொடர்ந்து, சிறுபான்மையினருக்கு எதிராக சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். மத்தியில் ஆட்சியை பிடித்துள்ள நாம், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்; மாறாக மத ரீதியாக பிரச்னைகளை கிளப்பும் நோக்குடன் கருத்துக்களை கூறக்கூடாது; பொருளாதார வளர்ச்சிக்கு இது தடையாக இருக்கும் என்று கட்சித் தலைமை எச்சரித்தது. ஆனால், சாத்வி போன்ற சிலர் இதை கண்டுகொள்ளவே இல்லை. தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை கூறி வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் சாத்வி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியது சர்ச்சையை கிளப்பியது. ‘இந்து மக்கள் எல்லாரும் குறைந்தபட்சம் நான்கு குழந்தைகளையாவது பெற்று வளர்க்க வேண்டும்’ என்றார். இதுபெரும் பிரச்னையை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் தந்து வெளியிட்ட அறிக்கையில், ‘நான் இந்து மதத்தை காக்க ஒவ்வொரு வரும் 4 குழந்தை பெற வேண்டும் என்று தான் சொன்னேன்; 40 நாய்க்குட்டிகளை பெற்று வளர்க்க சொல்லவில்லை’ என்று சாத்வி கூறியிருப்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘இதுபோன்று அறிக்கை வெளியிடுவதை பாஜ மேலிடம் ஒருபோதும் ஏற்காது; சாத்வியிடம் நான் பேசி , இனி சர்ச்சை கருத்து கூற வேண்டாம் என்று சொல்வேன்’ என்று மாநில பாஜ தலைவர் லட்சுமிகாந்த் பாஜ்பாய் கூறினார்.
மேலும் செய்திகள்
சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதால்வத் திடீர் கைது: போலி ஆவணங்களை தயாரித்து வழக்கு தொடர்ந்ததாக குற்றச்சாட்டு
நடுரோட்டில் இளம்பெண்ணை கொன்று சடலத்தை ஏரியில் வீசிய கணவன் கைது: திருமணமான 2 ஆண்டில் பரிதாபம்
சிவசேனா போட்டி எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மகாராஷ்டிராவில் பாஜ ஆட்சி அமைக்க முயற்சி; அமித்ஷாவுடன் இன்று ஆலோசனைக்கு பின் முக்கிய முடிவு.!
பிரதமர் மோடி ஆட்சியில் ரூ.6 லட்சம் கோடி வங்கி மோசடி: காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 11,739 ஆக குறைந்தது... சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 92 ஆயிரத்தை தாண்டியது!!
ஏக்நாத் ஷிண்டேவுடன் அசாமில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் குடும்பங்களுக்கு குறி?
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!