பவானிசிங்குடன் கருத்து வேறுபாடு ஜெயலலிதா வழக்கில் இருந்து முருகேஷ் மரடி திடீர் விலகல்
2015-02-03@ 01:04:38

பெங்களூரு: ஜெயலலிதா உள்பட நான்கு பேர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு விசாரணையில் அரசு உதவி வக்கீலாக செயல்பட்டு வந்த முருகேஷ் மரடி வழக்கில் ஆஜராவதில் இருந்து விலகினார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு தனிநீதிமன்றத்தில் நீதிபதி ஜான்மைக்கல் டிகுன்ஹா முன் விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, அரசு வக்கீலாக இருந்த பி.வி.ஆச்சார்யா ராஜினாமா செய்தபோது, புதிய அரசு வக்கீலாக பவானிசிங் கடந்த 2013 பிப்ரவரி மாதம் நியமனம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு உதவியாக முருகேஷ்மரடி நியமனம் செய்யப்பட்டார். இவ்வழக்கு தனி நீதிமன்றத்தில் நடந்தபோது, பவானிசிங்கை காட்டிலும், முருகேஷ்மரடி தான் அதிகமாக ஆஜராகி வாதம் செய்தார். குற்றவாளிகள் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை நடத்தியது, குற்றவாளிகள் தரப்பு வக்கீல்களுக்கு உடனுக்குடன் பதிலளிப்பது உள்பட தனது திறமையை முழுமையாக காட்டினார்.
தனிநீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க செய்வதில் பவானிசிங்கின் பங்களிப்பை காட்டிலும், முருகேஷ் மரடியின் பங்களிப்பு அதிகம் இருந்தது என்பது உண்மை. தற்போது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையிலும் பவானிசிங்கிற்கு உதவியாக முருகேஷ்மரடி கடந்த இரண்டு மாதமாக செயல்பட்டுவந்தார். இந்நிலையில் அவர் திடீரென வழக்கு விசாரணையில் இருந்து விலகி கொண்டுள்ளார். இது தொடர்பாக விசாரித்தபோது, அரசு துணை வக்கீலாக செயல்பட முறைப்படி அரசிடம் அனுமதி கடிதம் பெற்று கொடுக்க வேண்டும்.
மேலும் உரிய சம்பளம் தர வேண்டும் என்று பவானிசிங்கிடம் கேட்டதாகவும், அதற்கு அவர் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசாரிடம் அனுமதி கடிதமும், சம்பளம் வாங்கி கொடுக்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. அதையேற்காத மரடி, கர்நாடக அரசின் அனுமதி பெற்று கொடுத்தால் ஆஜராவேன் என்று கூறியதாக தெரிகிறது. அது சாத்தியமில்லை என்று பவானிசிங் கூறியதால், வழக்கில் இருந்து மரடி விலகியதாக தெரிகிறது.
மேலும் செய்திகள்
தேசிய அளவிலான தடுப்பூசி திருவிழா தொடக்கம்: தடுப்பூசி போட செல்லும் மக்களுக்கு தேவையான உதவியை செய்யுங்கள்..! பிரதமர் மோடி வலியுறுத்தல்
இந்தியாவில் உச்சமடையும் கொரோனா... ஒரே நாளில் 1,52,879 பேருக்கு தொற்று; 839 பேர் பலி...பீதியில் மக்கள்
கொரோனா அச்சத்திலும் போராட்டம்: டெல்லியில் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக 136 வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்..!
ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற சொகுசு பஸ்சில் ரூ.3.5 கோடி ஒரு கிலோ தங்கம் பறிமுதல்: சென்னை கல்லூரிக்கு சொந்தமானதா?
சட்ட விரோதமாக உறவினருக்கு பணி நியமனம் கேரளா அமைச்சர் ஜலீல் பதவியை பறிக்க வேண்டும்: லோக் ஆயுத்தா நீதிமன்றம் உத்தரவு
இலங்கைக்கு இந்தியா சிறப்பு விமான சேவை: மத்திய அரசு அறிவிப்பு
11-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புகழ்பெற்ற கும்பமேளா திருவிழா : கொரோனாவுக்கு மத்தியில் ஹரித்வாரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!
சொல்வதைக் கேட்டு நடக்கும் சீனாவின் ரோபோ நாய் : அட்டகாசமான புகைப்படங்கள்!!
09-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்
எங்கும் மரண ஓலம்.. கதிகலங்கும் பிரேசில்!: ஒரு நாளில் 4,195 பேர் கொரோனா கொல்லுயிரிக்கு பலி..!!