SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாகர்கோவிலில் வீடு புகுந்து ஓட்டல் உரிமையாளர் சரமாரி வெட்டிக்கொலை

2015-02-03@ 01:03:12

நாகர்கோவில் : நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் குமரி காலனி பகுதியை சேர்ந்தவர் விஜயமோகன். ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். இவரது மகன் வினோத் (36). ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் மீது அடிதடி வழக்குகள், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உண்டு. வட்டி தொழிலும் செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு தென்தாமரைக்குளத்தில் நண்பர் ஒருவரை பார்க்க குடும்பத்துடன் சென்று விட்டு இரவு 10.30 மணியளவில் வினோத் வீடு திரும்பினார். மனைவி மற்றும் குழந்தைகள் தூங்க சென்றதும், வினோத் வீட்டுக்கு வெளியே உள்ள வராண்டாவில் அமர்ந்து இருந்தார்.

அப்போது, ஒரே பைக்கில் 3 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் வினோத்தின் நெருங்கிய நண்பராக இருந்தவர் என கூறப்படுகிறது. அவர்கள் கையில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. அவர்களை பார்த்ததும் வினோத் பதறியடித்து வீட்டுக்குள் ஓடி சென்று கதவை பூட்ட முயன்றார். அதற்குள் மூவரும் வீட்டுக்குள் நுழைந்து வினோத்தை சரமாரியாக வெட்டினர். அவர் அங்கும், இங்கும் ஓடினார். ஆனால் வீட்டுக்குள் வைத்தே ஓட ஓட விரட்டி அவரை வெட்டி தள்ளினர். இதை கண்டு வினோத் மனைவி கூச்சலிட்டார். அவரது கண் எதிரிலேயே அந்த கும்பல் வினோத்தை வெட்டி தள்ளி விட்டு தப்பியது.

தகவலின்படி வடசேரி போலீசார் விரைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய வினோத்தை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை வினோத் இறந்தார். புகாரின்படி நாகர்கோவில் வாத்தியார்விளையை சேர்ந்த ஆல்வின் (29) உள்பட 3 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதற்கிடையே தேடப்பட்டு வந்த ஆல்வின் உள்ளிட்ட 3 பேர் போலீசாரிடம் சிக்கியதாக தெரிகிறது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வினோத் வீட்டில் உள்ள கேமராவில் கொலையாளிகள் உள்ளே நுழையும் காட்சிகள் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

நண்பன், பகைவனாக மாறியது எப்படி?

வினோத் கொலை தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: கொலை செய்யப்பட்ட வினோத் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். அந்த வகையில்தான் ஜெயசிங், ஆல்வின் இருவரும் வினோத்துக்கு நண்பர் ஆனார்கள். இதில் ஜெயசிங், வினோத்தின் விசுவாசியாகவே மாறினார். இது ஆல்வினுக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட தொடங்கியது. ஒரு கட்டத்தில் அவரிடம் இருந்து ஆல்வின் பிரிந்தார். இதனால், வினோத் மீது ஆல்வினின் கோபம் திரும்பியுள்ளது.வினோத்துக்கு பணம் இருப்பதால், கூலிப்படை வைத்து தன்னை தீர்த்து கட்டி விடுவான். எனவே நாம் முந்திக்கொள்ள வேண்டும் என்று தனது நண்பர்களிடம் கூறி உள்ளார். இதற்காக அவர்கள் ரகசிய திட்டம் தீட்டி உள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் வினோத்தை தீர்த்து கட்டி உள்ளனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

i want to cheat on my husband want to cheat on my husband my husband cheated on me blog
coupons for cialis printable blog.linglinzhu.com free discount prescription cards
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 04-12-2020

    04-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • rainpurevi111

    தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

  • radish3

    புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

  • farmers_proteeee11

    மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

  • 03-12-2020

    03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்