ஏக்கர் கணக்கில் நிலம் வளைப்பு கிரானைட் அதிபர்கள் மீது உச்சவரம்பு சட்டம் பாயாதது ஏன்?
2015-02-03@ 01:00:24

மதுரை : அளவுக்திகமான சொத்துக்களை சேர்த்த கிரானைட் அதிபர்கள் மீது நில உச்சவரம்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்காதது ஏன் என சரமாரியாக கேள்வி கேட்டு சகாயம் விசாரணை நடத்தினார். அவரது கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் அதிகாரிகள் திணறினர். சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, கிரானைட் முறைகேடு தொடர்பாக கடந்த டிச. 3 முதல் மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஏற்கனவே ஐந்து கட்ட ஆய்வினை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் முடித்துள்ளார். இந்நிலையில், ஆறாம் கட்ட ஆய்வு பணியை சகாயம் நேற்று துவக்கினார். கிரானைட் முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் சிலர் முக்கியமான தகவல்கள் அடங்கிய ஆவணங்களை மனுவாக சகாயத்திடம் கொடுத்துள்ளனர். அவர்களை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தார்.
இதேபோல் சில துறைகளின் அதிகாரிகளையும் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளார். அதன்படி ஆஜரானவர்களிடம் அவர் விசாரணை நடத்தினார். விசாரணையின் போது, கீழவளவை சேர்ந்த தங்கராஜ் கூறுகையில், ‘‘எங்களது பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட சின்னான் என்ற சின்னையா கோயில் சிறுமாணிக்கம் கண்மாய் பகுதியில் உள்ளது. இந்த கோயில் 1 ஏக்கர் 20 சென்ட் பரப்பளவு கொண்டது. இந்த பகுதியில் குவாரி அமைக்க பவ்லா என்ற நிறுவனம் அனுமதி பெற்றது. கோயில் நடைபாதை, கோயிலுக்கு எந்த தொந்தரவும் தரக்கூடாது என 1997ல் அப்போதைய கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். ஆனால் இந்த கோயில் நிலத்தை பிஆர்பி நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்தது. ஒருநாள் திடீரென்று கோயிலையே அகற்றி விட்டது.
இதுகுறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை,’’ என தெரிவித்தார். மாலையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமகிருஷ்ணனிடம் சகாயம் விசாரணை நடத்தினார். ‘கிரானைட் குவாரியால் எத்தனை கண்மாய்கள் அழிக்கப்பட்டன. எத்தனை கிமீ தூரத்துக்கு வரத்து கால்வாய்கள், ஓடைகள் அழிக்கப்பட்டன. கிரானைட் குவாரி உரிமதாரர்கள் இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டபோது உங்கள் துறை என்ன நடவடிக்கை எடுத்தது? புகார்கள் வந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? கண்மாய் அழிப்பால் எவ்வளவு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி இழந்தன’ என்பது குறித்து விசாரித்தார். நில சீர்திருத்த துறை உதவி ஆணையர் அசோகனிடம், ‘நில உச்சவரம்பு சட்டப்படி ஒருவர் 16 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கக் கூடாது. ஆனால் கிரானைட் குவாரி அதிபர்கள் சட்டத்தை மீறி அதிகமான ஏக்கர்களை ஒருவர் பெயரில் பதிவு செய்துள்ளனர். இதற்கு உங்கள் துறை என்ன நடவடிக்கை எடுத்தது.
வேளாண்மை நிலம் கனிமவளம் பயன்படுத்தப்படுகிறது என தெரிந்தும் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசு புறம்போக்கு நிலம், கண்மாய் ஏரி, கால்வாய் ஆகியவை ஏதேனும் பதிவு செய்யப்பட்டதா? கிரானைட் முறைகேட்டில் உங்கள் துறை எடுத்த நடவடிக்கை என்ன?’ என சகாயம் துருவி துருவி கிடுக்கிப்பிடி கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினார். அவரது கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் அதிகாரிகள் திணறியதாக கூறப்படுகிறது. இந்த விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்பட்டன. அதிகாரிகள் கூறும் தகவல்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கூறும் பதிலுக்கான ஆவணங்களையும் சகாயம் பெற்றுக் கொண்டார்.
இன்றும் விசாரணை தொடர்கிறது
இன்று ஆஜராகும்படி 4 பேருக்கு சகாயம் சம்மன் அனுப்பியுள்ளார். இதேபோல் நாளையும் அலுவலகத்தில் இருந்தவாறே பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடம் நேரடி விசாரணை நடத்த உள்ளார். கிரானைட் முறைகேடு தொடர்பாக பல தகவல்கள் இந்த விசாரணை மூலம் கிடைத்துள்ளன. தனி அறையில் வைத்து விசாரணை மேற்கொள்வதால் அவை வெளியிடப்படவில்லை.
மேலும் செய்திகள்
விருத்தாசலம் அருகே வலசை கிராமத்தில் மர்மநபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் சாந்தகுமாரி என்ற இளம்பெண் பலத்த காயம்..!
ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாய்மர படகு போட்டி
சாலையில் வைக்கப்படும் விளம்பர பேனர்களால் உயிர்பலி ஏற்படும் அபாயம்
தேங்காப்பட்டணத்தில் திடீர் கடல் சீற்றம் அரயந்தோப்பு சாலை மணல் மேடானது
தெற்கு ரயில்வேயில் 104 ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் கொல்லம்- கன்னியாகுமரி மெமூ தினசரி இயக்க அனுமதி கொச்சுவேளி ரயில் ஜூலை 11 முதல் இயக்கம்
ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் உலா வந்தனகாரை தாக்கிய காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் ஓட்டம்; போக்குவரத்து பாதிப்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!