ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் :ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
2015-02-03@ 00:58:29

மதுரை : தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பில் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரசார ரதத்தின் பயணம் ஜன. 27ல் சென்னையில் துவங்கியது. இந்த ரதம் நேற்று காலை மதுரை வந்தது. முனிச்சாலை சந்திப்பில் பிரசார ரதத்திற்கு த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். பின்னர் வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
தென் மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவியுள்ளது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் 22 கோடி இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். தமிழகத்தில் மட்டும் 94 லட்சம் பேர் உள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய, மாநில அரசுகள் எந்த திட்டங்களையும் உருவாக்கவில்லை. ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தவேண்டும். தேர்தலுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள், அப்பணியை முறையாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்கினார் வி.கே.சசிகலா: அதிமுக உச்சகட்ட உள்கட்சி பூசலுக்கு இடையே பயணம்..!
என்னுடைய எதிர்காலத்தை அதிமுக தொண்டர்களும் மக்களும் தீர்மானிப்பார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு பச்சைக்கொடி காட்டாவிட்டால் ஓபிஎஸ் எதிர்காலம் கேள்விக்குறி: ஆர்.பி.உதயகுமார் எச்சரிக்கை..!
சாதி ரீதியாக அதிமுகவினரை பிரிக்க முயற்சி: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி
சொல்லிட்டாங்க...
முதல்வரின் முதன்மை திட்டம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!