கிருஷ்ணகிரி அருகே வழித்தடம் ஆக்கிரமிப்பு மனு கொடுத்த தம்பதி கட்டாயமாக வெளியேற்றம்
2015-02-03@ 00:57:34

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சின்னமோதுகானப்பள்ளியைச் சேர்ந்தவர் பூங்கொடி (30). இவர் கணவன் முருகேசன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் குறை தீர்ப்பு முகாமில் மனு அளிக்க வந்தார். கோரிக்கை மனுவை மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியனிடம் கொடுத்தார். ‘‘நாங்கள் வழித்தடம் ஆக்கிரமிப்பு குறித்து 2004 முதல் மனு அளித்து வருகின்றோம். எங்கள் மனு மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்ற பதில் கூட வரவில்லை. தற்போது இந்த மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளீர்கள் என்பது குறித்து இப்போதே எங்களுக்கு சொல்ல வேண்டும்‘‘ என முருகேசன், பூங்கொடி தம்பதி கூறினர்.
ஆனால், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள், உங்கள் மனு மீது விசாரணை நடத்தப்படும். ஆகவே இங்கிருந்து வெளியே செல்லுங்கள் என கூறினர். அப்போ தும் அவர்கள் அங்கிருந்து வெளியே செல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை பார்த்துக் கொண்டிருந்த மாவட்ட வருவாய் அலுவலரின் டபேதார் மற்றும் போலீசார், பூங்கொடி அவரது கணவர் முருகேசன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகளையும் அந்த அறையில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வெளியில் கொண்டுபோய் விட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் வழக்கறிஞர் படுகொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
திருப்போரூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி பணி தொடக்கம்
திருப்போரூர் தொகுதியில் தபால் வாக்குப்பெட்டி பாதுகாப்பாக உள்ளதா? அரசியல் கட்சிகள், தேர்தல் அதிகாரிகளுக்கு கேள்வி
நெல்லிக்குப்பம் ஊராட்சியில் மூடிய மருத்துவமனை மீண்டும் செயல்பட வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்
அகரம் கிராமத்தில் கோடை வெயிலுக்காக மண் பானைகள் செய்யும் பணி தீவிரம்
வாகன விபத்தில் தந்தை, மகன் பலி
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்