நிறுத்திய உதவித்தொகையை வழங்கக்கோரி தாசில்தார் அலுவலகத்தை 1000 முதியோர் முற்றுகை
2015-02-03@ 00:56:05

சத்தியமங்கலம் : முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளி உள்ளிட்டோருக்கு மாதந்தோறும் ரூ.1000 தமிழக அரசு சார்பில் ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 19,000 பேர் பயன் அடைகின்றனர். அவர்களில், 4,050 பேருக்கு கடந்த ஓராண்டு காலமாக ஓய்வூதியத் தொகை வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து, வட்டாட்சியர் அலுவலகத்திலும் கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் ஓய்வூதிய உத்தரவு கடிதத்துடன் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தகவலறிந்து வந்த அதிகாரிகள் அவர்களை தனியார் திருமண மண்டபத்திற்கு வேன்களில் ஏற்றிச்சென்றனர். அங்கு வட்டாட்சியர் அலுவலக பணி யாளர்களைக்கொண்டு ஓய்வூதிய உத்தரவு கடிதத்தை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டு ள்ளனர். இதுகுறித்து சத்தியமங்கலம் தாசில்தார் சேதுராஜ் கூறும்போது, இதுவரையிலும் ஓய்வூதியத் தொகை வராமல் இருப்பதாக மொத்தம் 1272 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இம்மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாய்மர படகு போட்டி
சாலையில் வைக்கப்படும் விளம்பர பேனர்களால் உயிர்பலி ஏற்படும் அபாயம்
தேங்காப்பட்டணத்தில் திடீர் கடல் சீற்றம் அரயந்தோப்பு சாலை மணல் மேடானது
தெற்கு ரயில்வேயில் 104 ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் கொல்லம்- கன்னியாகுமரி மெமூ தினசரி இயக்க அனுமதி கொச்சுவேளி ரயில் ஜூலை 11 முதல் இயக்கம்
ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் உலா வந்தனகாரை தாக்கிய காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் ஓட்டம்; போக்குவரத்து பாதிப்பு
அச்சுறுத்தும் அங்கன்வாடி கட்டிடம் புதிதாக கட்ட வேண்டுகோள்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!