யானை மிதித்து மூதாட்டி பலி
2015-02-03@ 00:53:56

தர்மபுரி : தர்மபுரி அருகே மூதாட்டியை, ஒற்றை யானை மிதித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மாரண்டஅள்ளி அருகே கடத்திகொல்லுமேடு வனக்கிராமத்தை சேர்ந்தவர் சிவன்செட்டி(75), விவசாயி. இவரது மனைவி முனித்தாயம்மாள் (70). இவர்களது இரு மகன்களுக்கும் திருமணமாகி, தனித்தனியே வசிக்கின்றனர். சிவனும், முனித்தாயம்மாளும் விவசாய நிலத்தையொட்டியுள்ள குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை 7 மணியளவில், வீட்டு அருகே ஒற்றை பெண் யானை நிற்பதை பார்த்து முனித்தாயம்மாள் அதிர்ச்சியடைந்தார். நீண்ட கம்பால் யானையை விரட்ட முயன்றார். இதனால் கோபமடைந்த யானை, முனித்தாயம்மாளை தும்பிக்கையால் தூக்கி கீழே போட்டு மிதித்து கொன்றது. இதையடுத்து, அங்கு திரண்ட மக்கள், வெடி வைத்து யானையை விரட்ட முயன்றனர். இதில் மிரண்டுபோன யானை கூட்டத்தினரை விரட்டிவிட்டு தப்பியது. பயந்து ஓடியதில், கீழே விழுந்த ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர், தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் செய்திகள்
ஜூலை 1ம் தேதி முதல் கடற்கரை சாலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: புதுச்சேரி நகராட்சி அதிரடி
விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பூத்து குலுங்கும் மஞ்சள் நிற கொன்றை பூக்கள்: பொதுமக்கள் செல்பி எடுத்து மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் அரசு பஸ்சில் முதல் முறையாக பெண் கண்டக்டர் நியமனம்: ஆர்வமுடன் பணியாற்றுவதாக நெகிழ்ச்சி
புதுகை அருகே ஏர் கலப்பையுடன் விவசாயி உருவம் பொறித்த கல்வெட்டு கண்டுபிடிப்பு
பலத்த காற்று வீசுவதால் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ அணைப்பதில் சிக்கல்: 3வது நாளாக தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
வனவிலங்குகளின் பாதுகாப்புக்காக மேட்டுப்பாளையம்- கோத்தகிரி சாலையில் 7 இடங்களில் வேகத்தடை அமைப்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!