SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதல் வெளிநாட்டு பயணம் 16ல் இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் சிறிசேன

2015-02-03@ 00:51:32

 கொழும்பு: இலங்கையின் புதிய அதிபர் மைத்ரிபால சிறிசேன, தனது முதல் வெளிநாட்டு பயணமாக வருகிற 16ம் தேதி இந்தியாவிற்கு வருகிறார்.  இங்கு 2 நாட்கள் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட்ட ராஜபக்சே  படுதோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மைத்ரிபால சிறிசேன இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தல் முடிவுகள் வெளியானதும் சிறிசேனவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது இந்தியாவுக்கு  வரும்படி அழைப்பு விடுத்தார். அதை சிறிசேன ஏற்றுக் கொண்டார். இந்தியாவுடனான நட்புறவை மேம்படுத்த விரும்புவதாகவும் அவர் அறிவித்தார்.  மேலும் தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வர திட்டமிட்டிருப்பதாகவும் சிறிசேன அறிவித்தார்.

அதன் படி வருகிற 16ம் தேதி இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வருகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து சண்டே டைம்ஸ்  வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த மாதம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இந்தியா வந்தபோது அகதிகள் நாடு திரும்புதல்  உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூடன் ஆலோசனை நடத்தினார்.  இதனைத் தொடர்ந்து இலங்கை அதிபர்  மைத்ரிபால சிறிசேன தனது முதல் வெளிநாட்டு பயணமாக வருகிற 16ம் தேதி இந்தியா வருகிறார். அப்போது பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட  தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.2 நாட்கள் சுற்றுப் பயணம் செய்யும் அவர் இருநாட்டு உறவு குறித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.  

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளுக்கு அதிக அதிகாரம் அளிப்பது, தமிழக மீனவர் பிரச்னை உள்ளிட்டவை குறித்து அப்போது விவாதிக்கப்படும்  என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வருகிற மார்ச் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை இலங்கைக்கு பயணம்  மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தமிழர்கள் வசிக்கும் பகுதிக்கும் சென்று பார்வையிடுவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த 1987ம் ஆண்டில் அப்போதைய பிரதமர் ராஜிவ் காந்தி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு  செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

sms spy app phone monitoring software spy apps free
how do you know your wife cheated on you thesailersweb.com my spouse cheated on me now what
drug coupon card prescription coupons drug discount coupons
venlafaxine forum click venlafaxine 150
plavix tonydyson.co.uk plavix plm
generic for crestor 20 mg angkortaxidriver.com crestor.com coupons


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • twins22

  தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்