SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அரசின் மதக்கொள்கையால் நாட்டின் ஒருமைப்பாடு சீர்குலையும் : தா.பாண்டியன் பேட்டி

2015-02-03@ 00:50:44

ஜோலார்பேட்டை : மத்திய அரசு கடைபிடிக்கும் மதக்கொள்கை இந்திய ஜனநாயகத்திற்கு வேட்டும் ஒருமைபாட்டுக்கு எதிராக குழிதோண்டும் செயலாகவும் உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேலூர் மாவட்ட மாநாடு திருப்பத்தூரில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக மாநில செயலாளர் தா.பாண்டியன் நேற்று காலை ஜோலார்பேட்டை வந்தார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அரசியல் சட்ட அமைப்பில், மத சார்பற்ற கொள்கையை குழி தோண்டி புதைக்க மத்திய அரசு தயாராகி வருகிறது. இதனால் நாட்டின் ஒருமைப்பாடு சீர்குலையும். இந்த நிலை நீடித்தால் நாட்டை கூறு போட வேண்டிய நிலை உருவாகும்.

நாட்டிற்கு ஏற்பட்டுள்ள இந்த ஆபத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. இதனை தடுத்து நிறுத்த மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் இடைதேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளிக் கிறது. மாநில அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

how to prevent aids jasonfollas.com hiv lesions pictures
how do you know your wife cheated on you read my spouse cheated on me now what


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்