350 கி.மீ சென்று தாக்கும் பாகிஸ்தானின் ‘ராத்’ஏவுகணை சோதனை வெற்றி
2015-02-03@ 00:50:05

இஸ்லாமபாத்: உள்நாட்டு தொழில்நுட்பத்தில் 350 கி.மீ தூரம் ரகசியமாக சென்று தாக்கும் ‘ராத்’ என்ற ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக சோதித்தது. இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தானும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் நவீன ரக ஏவுகணைகளை தயார் செய்து அவ்வப்போது சோதித்து வருகிறது. இந்நிலையில் குறைந்த உயரத்தில் பறந்து 350 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் வகையில் ‘ராத்’ என்ற ஏவுகணையை பாகிஸ்தான் விஞ்ஞானிகள் உருவாக்கினர். இந்த ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை மூலம் அணு ஆயுத தாக்குதலும் நடத்த முடியும். ராத் ஏவுகணை சோதனை வெற்றிக்காக, விஞ்ஞானிகளுக்கு அந்நாட்டு அதிபர் மம்னூன் உசேன், பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
ஜி-7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி சென்றார் பிரதமர் மோடி: பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு
மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. உலக நாடுகளில் அதிகரிக்கும் வைரஸ் பாதிப்பு.. இதுவரை 54.86 கோடி பேருக்கு தொற்று உறுதி!!
நார்வே மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு 2 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவில் நடக்கும் கருக்கலைப்பு கலாட்டா....கடவுள் பாதி... மனிதன் பாதி...
அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாடு சட்டம் அமலானது: பிரதிநிதிகள் சபையிலும் நிறைவேறியது
உலகளாவிய இந்திய அழகி குஷி படேல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!