ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு கோயில் கடைகளுக்கான டெண்டர் ஒதுக்கீடு ரத்து
2015-02-03@ 00:48:47

மதுரை : திண்டுக்கல்லை சேர்ந்த கே.வீரபத்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் பின்புறமுள்ள மைதானத்தில் பிப். 12 முதல் மார்ச் 3 வரை கடைகள் அமைப்பதற்கான ஏலம் 31.12.2014ல் நடந்தது. நான் ஸீ20 லட்சத்திற்கு ஏலம் எடுக்க தயாராக இருந்தேன். டெண்டரிலும் கலந்துகொண்டேன். ஆனால் குறைவான தொகை குறிப்பிட்டவருக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து நான் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கில் கூடுதல் தொகை குறிப்பிட்டவருக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இன்னும் குறைவான நாட்களே இருப்பதாக கோயில் தரப்பில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் கூடுதல் ஏலத் தொகையை வசூலிக்க உத்தரவிட்டது. தற்போதும் முறைகேடாக டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.ராஜேந்திரன், ‘‘கண் துடைப்பாக ஏலம் நடந்துள்ளது. எனவே டிச. 31ம் தேதி நடந்த டெண்டர் ஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. புதிதாக டெண்டர் விட வேண்டும். இதில் அதிகாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்,‘‘ என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் வழக்கறிஞர் படுகொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
திருப்போரூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி பணி தொடக்கம்
திருப்போரூர் தொகுதியில் தபால் வாக்குப்பெட்டி பாதுகாப்பாக உள்ளதா? அரசியல் கட்சிகள், தேர்தல் அதிகாரிகளுக்கு கேள்வி
நெல்லிக்குப்பம் ஊராட்சியில் மூடிய மருத்துவமனை மீண்டும் செயல்பட வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்
அகரம் கிராமத்தில் கோடை வெயிலுக்காக மண் பானைகள் செய்யும் பணி தீவிரம்
வாகன விபத்தில் தந்தை, மகன் பலி
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்