வாணியம்பாடி அருகே போர்வெல் அமைக்க கடன் கேட்டு வங்கியில் விவசாயிகள் முற்றுகை
2015-02-03@ 00:48:01

வாணியம்பாடி : வாணியம்பாடி அருகே ஆழ்துளை கிணறு தோண்ட கடன் வழங்கக்கோரி கூட்டுறவு வங்கியை பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இவ்வங்கியில் வெள்ளக்குட்டை, நன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேமிப்பு கணக்கு மற்றும் நகைகளை அடகு வைத்துள்ளனர். மேலும் விவசாய கடன்களையும் பெற்றுள்ளனர். இந்த வங்கி தலைவராக நன்னேரி கிராமத்தை சேர்ந்த ராஜமாணிக்கம், துணை தலைவராக ஆனந்தன் உட்பட 11 இயக்குனர்கள் உள்ளனர். வங்கி செயலாளராக வடிவேலு மற்றும் 7 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இங்கு மத்திய, மாநில அரசு சார்பில் விவசாய கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் ஸீ1 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. இதற்காக 46 விவசாயிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவை கலெக்டர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து உடனடியாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் 2 மாதமாகியும் வங்கி நிர்வாகம் எந்த பதிலும் கூறவில்லை. கடந்த மாதம் நடந்த வங்கி செயற்குழுவில் புதிய ஆழ்துளை கிணறு கடன் சம்பந்தமாக 24 பேருக்கு மட்டும் கடன் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு 6 இயக்குநர்கள் பரிந்துரை செய்து ள்ளனர். மற்ற 5 இயக்குநர்கள், வங்கி கடன் கேட்ட 46 பேருக்கும் கடன் வழங்குவதாக தீர்மானம் கொண்டு வந்தால் மட்டுமே கையெழுத்து போடுவோம் எனக்கூறி புறக்கணித்தனர். இதையறிந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10 மணியளவில் கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டனர். அப்போது வங்கிக்கு வந்த இயக்குனர் அன்பு, விவசாயி களை கலைந்து செல்லுமாறு கூறினார். இதனால் பொதுமக்கள், அன்புவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், தலைவர் வெளியூர் சென்று உள்ளார். அவர் வந்த பின்னர் வரும் புதன் கிழமை இதுகுறித்து பேசி முடிவு செய்யலாம் என தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகள்
ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாய்மர படகு போட்டி
சாலையில் வைக்கப்படும் விளம்பர பேனர்களால் உயிர்பலி ஏற்படும் அபாயம்
தேங்காப்பட்டணத்தில் திடீர் கடல் சீற்றம் அரயந்தோப்பு சாலை மணல் மேடானது
தெற்கு ரயில்வேயில் 104 ரயில்கள் மீண்டும் இயக்கப்படும் கொல்லம்- கன்னியாகுமரி மெமூ தினசரி இயக்க அனுமதி கொச்சுவேளி ரயில் ஜூலை 11 முதல் இயக்கம்
ஆசனூர் அருகே நெடுஞ்சாலையில் உலா வந்தனகாரை தாக்கிய காட்டு யானைகள் வாகன ஓட்டிகள் ஓட்டம்; போக்குவரத்து பாதிப்பு
அச்சுறுத்தும் அங்கன்வாடி கட்டிடம் புதிதாக கட்ட வேண்டுகோள்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!