திருப்பத்தூர் அருகே அதிரடி சிறுமிகள் 2 பேருக்கு திருமணம் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்
2015-02-03@ 00:46:05

திருப்பத்தூர் : திருப்பத்தூர் அருகே நேற்று காலை நடக்க இருந்த 2 சிறுமிகள் திருமணங்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சின்ன கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் குழந்தை திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. தகவலின்படி திருப்பத்தூர் துணை தாசில்தார் பிரபுகணேஷ், வருவாய் ஆய்வாளர் முரளி, சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் மற்றும் கந்திலி போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் அதே கிராமத்தை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும், 16 வயது பெண்ணுக்கும், 25 வயது வாலிபருக்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது தெரிந்தது.
இதையடுத்து அதிகாரிகள், 18 வயது பூர்த்தியாகாமல் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கக்கூடாது என இருவீட்டாரையும் எச்சரித்து எழுதி வாங்கி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். அதேபோல் பெரியகரம் பாண்டியன் வட்டம் பகுதியை சேர்ந்த 15 வயது பெண்ணுக்கும், அதே கிராமத்தை சேர்ந்த 25 வாலிபருக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அதிகாரிகள் இருவீட்டாரிடமும் விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த திருமணத்தையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். திடீரென திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதால், உறவினர்கள், நண்பர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மேலும் செய்திகள்
காஞ்சிபுரம் வழக்கறிஞர் படுகொலை உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்
திருப்போரூர் பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி பணி தொடக்கம்
திருப்போரூர் தொகுதியில் தபால் வாக்குப்பெட்டி பாதுகாப்பாக உள்ளதா? அரசியல் கட்சிகள், தேர்தல் அதிகாரிகளுக்கு கேள்வி
நெல்லிக்குப்பம் ஊராட்சியில் மூடிய மருத்துவமனை மீண்டும் செயல்பட வேண்டும்: கிராம மக்கள் வலியுறுத்தல்
அகரம் கிராமத்தில் கோடை வெயிலுக்காக மண் பானைகள் செய்யும் பணி தீவிரம்
வாகன விபத்தில் தந்தை, மகன் பலி
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்