காதலிக்கு முத்தம் கோஹ்லிக்கு கபில் ஆதரவு
2015-02-03@ 00:38:07

புது டெல்லி: இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராத் கோஹ்லி சிறப்பாக விளையாடி சதம் அடிக்கும்பட்சத்தில், கேலரியில் இருக்கும் தனது தோழியை நோக்கி அவர் முத்தத்தை பறக்கவிடுவதை பொருட்படுத்த தேவையில்லை என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறியுள்ளார். உலக கோப்பை தொடர் நெருங்கிவிட்ட நிலையில், நடப்பு சாம்பியனான இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து கபில் தேவ் நேற்று கூறியதாவது: 2011 உலக கோப்பையில் விளையாடிய வீரர்களில் பலர் இன்றைய அணியில் இல்லை. உலக கோப்பை அனுபவம் இல்லாவிட்டாலும், இறுதி வரை போராடக் கூடிய துணிச்சலான வீரர்கள் உள்ளனர். இந்திய அணி நிச்சயமாக அரை இறுதிக்கு முன்னேறும்.
அரை இறுதியில் விளையாடும் நான்கு அணிகளுக்குமே தலா 25 சதவீத வாய்ப்பு உள்ளது. எனவே கோப்பை யாருக்கு என்பதை கணிப்பது கடினம்.
போட்டிகளின்போது விராத் கோஹ்லி தனது தோழிக்கு முத்தத்தை பறக்கவிடுவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் சிறப்பாக விளையாடி சதம் விளாசும்போது அப்படி நடந்துகொள்வதை பொருட்படுத்த தேவையில்லை. டக் அவுட் ஆகிவிட்டு பிளையிங் கிஸ் கொடுத்தால் தான் தவறு. இன்றைய கிரிக்கெட் வெகுவாக மாறிவிட்டது. இவ்வாறு கபில் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு 2வது ரேங்க்
உலக கோப்பை போட்டித் தொடரில் இந்திய அணி 2வது ரேங்க்குடன் களமிறங்குகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் துபாயில் நேற்று வெளியிட்ட ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில், ஆஸ்திரேலியா 120 தரப்புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியா 114 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது.
*அனுபவம் வாய்ந்த டோனி கேப்டனாக இருப்பது உலக கோப்பையில் இந்திய அணிக்கு சாதகமான அம்சமாக இருக்கும் என்று பாகிஸ்தான் அணி முன்னாள் நட்சத்திரங்கள் இன்சமாம் உல் ஹக், சோயிப் அக்தர் இருவரும் கூறியுள்ளனர்.
* உலக கோப்பை ஏ பிரிவில் ஆஸ்திரேலிய அணியுடன் நடக்கும் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏதுமில்லை என்று அந்த அணி வீரர்கள் நினைத்தால் அது பகல் கனவாகவே இருக்கும் என்று ஆஸி. வேகம் மிட்செல் ஜான்சன் கூறியுள்ளார்.
* ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் விளையாட தான் தயாராக இருப்பதாக காயம் காரணமாக ஓய்வெடுத்து வரும் ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
* உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பதில் ஆர்வமாக இருப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் முகமது இர்பான் கூறியுள்ளார். இவர் 7 அடி 2 அங்குல உயரம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
*காயத்தால் அவதிப்பட்டு வரும் பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஜுனைத் கான் உலக கோப்பை தொடரில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற சோதனையில் அவர் தனது உடல்தகுதியை நிரூபிக்கத் தவறினார். மாற்று வீரர் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
மேலும் செய்திகள்
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி
ரோஹித்சர்மாவுக்கு கொரோனா; கடைசி டெஸ்டில் களமிறங்குவது சந்தேகம்
அயர்லாந்துடன் இன்று முதல் டி20; 2 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு; வெற்றி மட்டுமே ஒரே நோக்கம்.! கேப்டன் ஹர்திக்பாண்டியா பேட்டி
டிஎன்பிஎல் கிரிக்கெட்; சேலத்தை வீழ்த்தியது நெல்லை.! கோவை-திண்டுக்கல் இன்று மோதல்
தமிழகத்தில் நடைபெற உள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியிலிருந்து விலகியது சீன அணி
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் இன்று தொடக்கம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!