கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை சோனியாவுக்கு ஈவிகேஎஸ் கடிதம்
2015-02-03@ 00:29:15

சென்னை : கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சோனியா காந்திக்கு எழுதிய பரிந்துரை கடிதத்தை மேலிட பொறுப்பாளரிடம், ஈவிகேஎஸ்.இளங்கோவன் நேற்று டெல்லியில் ஒப்படைத்தார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அவசர அழைப்பாக டெல்லி சென்றார். அங்கு சென்ற அவர், டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை தமிழகத்துக்கான மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ப.சிதம்பரம் தொடர்பான புகாருக்கு சோனியா காந்தி என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அவரிடம் அதற்கான தகுந்த விளக்கத்தையும் அளித்துவிட்டேன். நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று சோனியாவோ அல்லது ராகுலோ எனக்கு சம்மன் எதுவும் அனுப்பவில்லை. வரும் 7ம்தேதி முகுல் வாஸ்னிக் சென்னை வருகிறார். இது தொடர்பாக, இன்று அவரை சந்தித்து பேசினேன்.
கார்த்தி சிதம்பரத்தை நீக்குவது தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன். அவரும் எனக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். மேலிடம் மட்டுமே என் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறியுள்ளார். இதனால் அவரது கடிதத்தையும், அதோடு எனது பரிந்துரை கடிதம் ஒன்றையும் சேர்த்து சோனியா காந்தியிடம் ஒப்படைக்கும்படி முகுல்வாஸ்னிக்கிடம் கொடுத்துள்ளேன். ப.சிதம்பரம் விவகாரம் தொடர்பாக நான் டெல்லி வரவில்லை. அவர்கள்தான் தவறான தகவலை பரப்பிவிட்டுள்ளனர். தேர்தல் பிரசாரத்துக்காகவே டெல்லி வந்தேன். இவ்வாறு அவர் கூறினார். பரிந்துரை கடிதம் என்றால் கார்த்தி சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியா என்று கேட்டதற்கு, ‘‘மாநில தலைவர் என்ற முறையில், எனது கடிதத்தையும் சேர்த்து அகில இந்திய தலைவருக்கு கொடுத்துள்ளேன்’’ என்றார்.
மேலும் செய்திகள்
ஒருங்கிணைப்பாளரை நீக்குவதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது: சண்முகம் புரியாமல் பேசுவதாக முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் குற்றச்சாட்டு
அதிமுக ஆபீஸ்களில் ஓபிஎஸ் படம் அகற்றம் நாகையில் இபிஎஸ் உருவபொம்மை எரிப்பு
காவல்துறை புகார் ஆணையம் குறித்த மக்கள் நீதி மய்யத்தின் முன்னெடுப்புகள் தொடரும்: கமல்ஹாசன் தகவல்
ஒருங்கிணைப்பாளரை யாரும் பதவி நீக்கம் செய்ய முடியாது: கோவை செல்வராஜ் பேட்டி
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையீடு இல்லை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
15வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் வேட்பு மனுதாக்கல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!