வக்கீல் கொலைக்கு கண்டனம் : ஒருநாள் கோர்ட் புறக்கணிப்பு போராட்டம்
2015-02-03@ 00:23:57

சென்னை : எழும்பூரில் நடந்த வக்கீல் கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வக்கீல்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர். எழும்பூரில் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வக்கீல்கள் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும். இந்தாண்டு தேர்தல் கடந்த வெள்ளியன்று நடந்தது. சந்தன்பாபு தலைமையில் ஒரு அணியும், மைக்கேல் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டது. இதில் சந்தன்பாபு வெற்றி பெற்றார். இந்த கொண்டாட்டத்தின் போது சந்தன்பாபு ஆதரவாளர் வக்கீல் ஸ்டா லின் கொலை செய்யப்பட் டார். இது தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்ட னர். தலைமறைவாக உள்ள 30க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு பின்னர், எழும்பூர் நீதிமன்ற வளாகத் தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் நேற்று செயல்பட்டன. ஆனால், வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை நேற்று புறக்கணித்தனர். ஸ்டாலின் கொல்லப்பட்டதை கண்டித்து துக்க தினமாக அனுசரித்தனர்.
இதுகுறித்து வக்கீல் ஒருவர் கூறுகையில், “வக்கீல் சங்க தேர்தல் முடிவுகள் வெளியிடும் போது போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தற்போது வக்கீல்கள் என்ற போர்வையில் பல கிரிமினல்கள் சுற்றித்திரிகின்றனர். அவர்கள் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். பாதுகாப்பு குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், “நாங்கள் போதுமான அளவு பாதுகாப்பு அளிக்கிறோம். ஆனால், வக்கீல்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை“ என்று குற்றம் சாட்டினர்.
மேலும் செய்திகள்
எவ்வித அறிகுறிகளும் இன்றி கொரோனா பரவல்: முதியவர்கள் தயக்கமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தல்.!!!
சட்டமேதை டாக்டர் BR அம்பேத்கரின் 130வது பிறந்தநாள்: கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மு.க.ஸ்டாலின் மரியாதை.!!!
சித்திரை முதல் நாளான இன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட அனுமதி: தமிழக அரசு உத்தரவு
கும்பமேளாவில் பங்கேற்ற 102 பேருக்கு கொரோனா: முககவசம், சமூக இடைவெளி இல்லை பலருக்கு பரவி இருக்கும் அபாயம்
பெண் வியாபாரியிடம் காய்கறி, பழங்கள் திருட்டு
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற ரயில்வே ஊழியர் பரிதாப பலி: தனியார் மருத்துவமனையை உறவினர்கள் திடீர் முற்றுகை
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்